ஊக்கமருந்து சர்ச்சையில் கோமதி மாரிமுத்து

விளையாட்டு
Updated May 22, 2019 | 08:09 IST | The Times of India

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கணை கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த செய்தியை கோமதி மாரிமுத்து மறுத்துள்ளார்.

gomathi marimuthu
கோமதி மாரிமுத்து  |  Photo Credit: Twitter

கடந்த மாதம் தோஹாவில் ஆசிய தடகளப் போட்டி நடைபெற்றது. இதில் திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 800 மீ. ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவர் தங்கம் வென்ற பிறகு பலரும் அவருக்கு உதவிகள் செய்து வருகிறார்கள். 

இந்நிலையில் போட்டியின்போது அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதில்  A சாம்பிள் டெஸ்டில் அவர் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் B சாம்பிள் டெஸ்ட் வியாழக்கிழமை அன்று கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிலும் அவர் ஊக்கமருந்து எடுத்துக்கொண்டது உறுதிசெய்யப்பட்டால் அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்படுவதுடன் 4 ஆண்டுகள் தகுதி நீக்கமும் செய்யப்படுவார். 

இதுகுறித்து கோமதியிடமும் அவர்கள் கேட்டதற்கு கோமதி மாரிமுத்து அதனை முற்றிலும் மறுத்துள்ளார். நான் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு முன் பல தடைகளைத் தாண்டி வந்துள்ளேன். ஒரு போது தடை செய்யப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வது பற்றி யோசித்ததுகூட இல்லை. B சாம்பிள் டெஸ்ட் கண்டிப்பாக் எனக்கு சாதகமாக வரும் என்று நம்பிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அவர் வரும் வியாழக்கிழமை பயிற்சிக்காக போலந்து நாட்டுக்கு செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் இன்னும் சில வீரர்களுடன் செல்லவிருந்ததாகவும் தற்போது அவரது டிக்கெட்டை ரத்து செய்திருப்பதாகவும் தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளதகாக இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

NEXT STORY
ஊக்கமருந்து சர்ச்சையில் கோமதி மாரிமுத்து Description: ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கணை கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த செய்தியை கோமதி மாரிமுத்து மறுத்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola