தங்கம் வென்ற தமிழக மங்கைக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கினார் ரோபோ சங்கர்

விளையாட்டு
Updated Apr 27, 2019 | 09:43 IST | Times Now

தோகாவில் நடைபெற்ற 23-வது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சோ்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்றார்.

Gomathi Marimuthu, Actor Robo Shankar, கோமதி மாரிமுத்து, நடிகர் ரோபோ சங்கர்
கோமதி மாரிமுத்து, நடிகர் ரோபோ சங்கர்  |  Photo Credit: Twitter

சென்னை: ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் ரோபோ சங்கர் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று தமிழகம் திரும்பிய கோமதியை அவரது இல்லத்தில் சந்தித்து பரிசுத்தொகையை வழங்கினார்.

23- வது ஆசிய தடகளப் போட்டி தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் சார்பில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு தங்கம் வென்றவர் கோமதி மாரிமுத்து. பந்தய தூரமான 800 மீட்டரை மின்னல் வேகத்தில் 2 நிமிடம் 2.70 விநாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்தாா்.  

30 வயதான கோமதி மாரிமுத்து திருச்சி மாவட்டம், முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர். வெளியில் யாருக்கும் தெரியாத சிறிய கிராமத்தில் இருந்து வந்து இன்று இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஆசிய தடகள போட்டியில் முதல் தங்கத்தை வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இதுதவிர சமூகவலைதளங்களிலும் கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. கோமதி மாரிமுத்துவின் திறமையை பாராட்டி முதல் நபராக நடிகர் ரோபோ சங்கர் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று தமிழகம் திரும்பிய கோமதியை அவரது இல்லத்தில் சந்தித்து பரிசுத்தொகையை வழங்கினார். 

NEXT STORY
தங்கம் வென்ற தமிழக மங்கைக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கினார் ரோபோ சங்கர் Description: தோகாவில் நடைபெற்ற 23-வது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சோ்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்றார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles