உலக ராணுவ விளையாட்டுப் போட்டி: தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் மூன்றாவது தங்கம் வென்று சாதனை!

விளையாட்டு
Updated Oct 25, 2019 | 15:19 IST | Times Now

100, 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்று, 2020-ல் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியடைந்துள்ளார்.

Anandan Gunasekaran, ஆனந்தன் குணசேகரன்
ஆனந்தன் குணசேகரன்  |  Photo Credit: Twitter

சீனா: 7-வது உலக ராணுவ விளையாட்டு போட்டியில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் 3 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார். 100, 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் ஆனந்தன் தங்கம் வென்றுள்ளார்.

மாற்றுத்திறனாளியான ஆனந்தன் சமீபத்தில் பாரிஸ் நகரில் நடைபெற்ற 200 மீட்டர் போட்டியில் வெற்றி பெற்று, 2020-ல் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதியடைந்தார்.

2008 ஜூன் 4-ஆம் தேதி கண்ணிவெடி தாக்கியதில் ஆனந்தனின் இடது கால் படுகாயமடைந்தது. இதனை தொடர்ந்து அவரது மூட்டுக்கு கீழ் உள்ள இடது கால் பகுதி அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது.

2015-ல் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் இந்திய ராணுவம் மற்றும் பாராலிம்பிக் கமிட்டியின் சார்பில் ஆனந்தன் பங்கேற்று 200 மீட்டரில் தங்கமும், 100 மீட்டரில் வெள்ளியும் வென்றார்.

உலக பாரா மிலிட்டரி போட்டிகளில் T-44 பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியன் என்ற சாதனையை ஆனந்தன் குணசேகரன் பெற்றுள்ளார். கடந்த அக்டோபரில் நடைபெற்ற பாரா ஏசியன் போட்டிகளில் 400 மீட்டரில் வெள்ளியும், 200 மீட்டரில் வெண்கலமும் வென்றார் ஆனந்தன்.

NEXT STORY