சென்னை சூப்பர் கிங்க்ஸும் ஐபிஎல் ஃபைனல்ஸுகளும் - ஒரு சின்ன ரீகேப்!

விளையாட்டு
Updated May 11, 2019 | 10:48 IST | டைம்ஸ் நவ் தமிழ்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் குவாலிஃபையர் 2 சுற்றில் சென்னை அணி டெல்லியை தோற்கடித்து எட்டாவது முறையாக இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்க்ஸும் ஐபிஎல் ஃபைனல்ஸுகளும் - ஒரு சின்ன ரீகேப்!

Chennai Super Kings
சென்னை சூப்பர் கிங்ஸ் pic/IPL  |  Photo Credit: Twitter

நேற்று விசாகப்பட்டினத்தில் டெல்லியைத் தோற்கடித்து ஃபைனல்ஸுக்கு சென்றதன் மூலம் ஐபிஎல்-இல் எட்டு முறை ஃபைனல்ஸுக்கு சென்ற ஒரே அணி என்ற சாதனையைப் பெற்றது சென்னை அணி. அதுவும் இரண்டு வருடம் ஐபிஎல் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் ஃபைனல்ஸில் சிஎஸ்கே அணியின் பயணத்தைப் பற்றி இங்கே சில சுவாரஸ்யத் தகவல்கள்!

  1. இதற்கு முன்னால் விளையாடிய ஏழு ஃபைனல்ஸில் சென்னை அணி மூன்றில் வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் நான்கு போட்டிகளில் ரன்னர்-அப்பாக வந்திருக்கிறது.
  2.  சிஎஸ்கேவைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அதிகமுறை ஃபைனல்ஸ் சென்ற அணியாக இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நான்கு முறை ஃபைனல்ஸ் சென்ற மும்பை, மூன்று முறை மோதியது சென்னையோடுதான்! 
  3. 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து இறுதிப்போட்டியில் மோதியது சென்னை அணி. அதில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது. அவர்களுக்கு அதுதான் முதலும் கடைசியுமான ஃபைனல்!
  4. 2010-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதின, சிஎஸ்கே அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சேம்பியன் ஆனது.
  5. 2011-ஆம் ஆண்டு ஆர்சிபியுடன் ஃபைனலில் மோதியது சென்னை, 58 ரன் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. 
  6. 2012-ஆம் ஆண்டு ஃபைனல் கொல்கத்தா அணியுடன். இப்போது நடந்தைதைப் போலவே டெல்லி அணியை குவாலிஃபையர் சுற்றில் வென்று இறுதிப்போட்டிக்கு சென்றது. ஆனால் கொல்கத்தா அணி சேம்பியன் பட்டம் வென்றது.
  7. 2013-ஆம் ஆண்டு மீண்டும் மும்பையுடன் ஃபைனல். இந்த முறை மும்பை கப்பை அடித்துச்சென்றது. 
  8. 2015-ஆம் ஆண்டும் மும்பையுடன் தான். இந்த முறை 41 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்துச் சேம்பியன் ஆனது மும்பை!
  9. அதன்பிறகு 2016, 2017 சூதாட்டப் பிரச்னையில் சென்னை அணி விளையாடவில்லை. 2018-ஆம் ஆண்டு ஹைதராபாத்துடன் மோதி கோப்பையை வென்றது! 
  10. தான் சந்தித்த 10 ஐபிஎல் போட்டிகளில் எட்டு போட்டிகளில் ஃபைனல்ஸுக்கு சென்று சாதனை படைத்த சென்னை, மும்பையை சந்தித்த மூன்று இறுதிப்போட்டிகளில் ஒரு முறை வெற்றி பெற்றிருக்கிறது.  

 

நாளை ஹைதராபாத்தில் இரவு 7:30 மணிக்கு நான்காவது முறையாக மும்பையும், சென்னையும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. சர்வதேச போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் எப்படியோ அப்படிதான் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் போட்டியும். சும்மாவே ரசிகர்கள் சலங்கைக் கட்டி ஆடுவார்கள். அதுவும் ஃபைனல்ஸ் என்றால் கேட்கவேண்டுமா என்ன?!

NEXT STORY
சென்னை சூப்பர் கிங்க்ஸும் ஐபிஎல் ஃபைனல்ஸுகளும் - ஒரு சின்ன ரீகேப்! Description: நேற்று நடைபெற்ற ஐபிஎல் குவாலிஃபையர் 2 சுற்றில் சென்னை அணி டெல்லியை தோற்கடித்து எட்டாவது முறையாக இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்க்ஸும் ஐபிஎல் ஃபைனல்ஸுகளும் - ஒரு சின்ன ரீகேப்!
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola