’விராத் 18’ - வைரலாகும் கோஹ்லி பெயர் பொறித்த பச்சை நிற ஜெர்சி அணிந்த பாக் இளைஞர்!

விளையாட்டு
Updated Jun 11, 2019 | 15:40 IST | Times Now

கொஞ்ச நாட்களுக்கு முன்பு விராத் கோஹ்லிக்கு, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மொயின் கான் லண்டனில் புகழாரம் சூட்டியிருந்தார்.

cricket, கிரிக்கெட்
விராத் கோஹ்லி  |  Photo Credit: Twitter

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இந்திய கிரிக்கெட் வீரரான விராத் கோஹ்லியின் பெயர் பதிக்கப்பட்ட ஜெர்சி அணிந்த ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு விராத் கோஹ்லிக்கு, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மொயின் கான் லண்டனில் புகழாரம் சூட்டியிருந்தார். அவருக்கு பாகிஸ்தானிலும் ரசிகர்கள் எக்கச்சக்கம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானில் பலரும் ‘விராத் 18’ என்று பொறிக்கப்பட்ட பச்சை நிற ஜெர்சி ஒன்றினை அணிந்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கிரிக்கெட் மற்றும் விராத் கோஹ்லி ரசிகர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

 

ஏற்கனவே, ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியபிறகு பாகிஸ்தானில் இந்திய அணிக்கு மவுசு அதிகரித்துவிட்டது. குறிப்பாக எல்லாவற்றையும் தாண்டி விராத் கோஹ்லிக்கு அங்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்காத குறைதான். இந்நிலையில்தான் அதை நிரூபிக்கும் வகையில் பாகிஸ்தான், லாகூரில் விராத் பெயர் பொறித்த பச்சை வண்ண ஜெர்சியை அணிந்த இளைஞர் ஒருவர் பைக்கில் செல்லும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

NEXT STORY
’விராத் 18’ - வைரலாகும் கோஹ்லி பெயர் பொறித்த பச்சை நிற ஜெர்சி அணிந்த பாக் இளைஞர்! Description: கொஞ்ச நாட்களுக்கு முன்பு விராத் கோஹ்லிக்கு, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மொயின் கான் லண்டனில் புகழாரம் சூட்டியிருந்தார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles