குறைதீர்க்கும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா - இன்று தொடக்கம்!

ஆன்மிகம்
Updated Apr 02, 2019 | 15:03 IST | Times Now

மகாபாரதப் போரில் காளிக்காக களப்பலி கொடுக்கப்பட்ட அரவானை அவரது ஆசைக்கிணங்க மணந்து கொள்ள கிருஷ்ணர், மோகினி அவதாரமெடுத்து அரவானை மணந்து கொண்டார் கிருஷ்ணர்.

koovagam, கூவாகம்
கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா  |  Photo Credit: Twitter

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கூவாகத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயில் திருவிழா இன்று முதல் துவங்குகிறது.

கூத்தாண்டவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான சித்திரை பெருவிழா சாரகை வார்த்தலுடன் இன்று தொடங்குகிறது.

இந்த திருவிழாவானது இன்று தொடங்கி 18 நாட்கள் நடைபெறும். இன்று மாலை நான்கு மணியளவில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

மகாபாரதப் போரில் காளிக்காக களப்பலி கொடுக்கப்பட்ட அரவானை அவரது ஆசைக்கிணங்க மணந்து கொள்ள கிருஷ்ணர், மோகினி அவதாரமெடுத்து அரவானை மணந்து கொண்டார் கிருஷ்ணர். அதனை நினைவுகூறும் வகையிலேயே ஒவ்வொரு வருடமும் இந்த கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெறுகிறது. 

வருகின்ற 15ம் தேதி ‘மிஸ் கூவாகம்’ போட்டியும், 16ம் தேதியன்று அரவானுக்காக தாலி கட்டிக் கொள்ளும் வைபவமும் நடைபெற இருக்கின்றது.

 17ம் தேதியன்று சித்திரை தேரோட்டமும், அன்றே அரவானுக்காக திருநங்கைகள் விதவைக் கோலம் பூண்டு கதறி அழும் வைபவமும் நடைபெறும். அன்றுடன் சித்திரை திருவிழா முடிவடைந்து திருநங்கைகள் சொந்த ஊர் திரும்புவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரவானை வணங்குவதன் மூலம் தீராத நோய்கள் தீரும் எனவும், குழந்தையில்லாப் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. 

NEXT STORY
குறைதீர்க்கும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா - இன்று தொடக்கம்! Description: மகாபாரதப் போரில் காளிக்காக களப்பலி கொடுக்கப்பட்ட அரவானை அவரது ஆசைக்கிணங்க மணந்து கொள்ள கிருஷ்ணர், மோகினி அவதாரமெடுத்து அரவானை மணந்து கொண்டார் கிருஷ்ணர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola