திருநள்ளாறு சனி பகவான் கோவில் தோரோட்டம் தொடங்கியது

ஆன்மிகம்
Updated Jun 12, 2019 | 08:17 IST | Times Now

இதனைத் தொடர்ந்து நாளை சனி பகவான் தங்க காக வாகனத்தில் வரும் வீதி உலா நிகழ்ச்சியும் 14-ஆம் தேதி தெப்ப உற்சமும் நடைபெறுகிறது.

திருநள்ளாறு தேரோட்டம்
திருநள்ளாறு தேரோட்டம்  |  Photo Credit: Facebook

இன்று நவக்கிரகத் தலங்களில் ஒன்றான திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலின் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் காரைக்காலில் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

உலக அளவில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோவில் தர்பாரண்யேஸ்வரர். இந்தக் கோவில் காரைக்கால் மாவட்டம்ட் திருநள்ளாற்றில் உள்ளது. இங்கு பிரணாம்பிகையுடன் தர்பாரண்யேசுவரர் எழுந்தருளுகிறார். இங்கு சனி பகவானுக்கு பிரத்யேக சன்னதி இருக்கிறது. சனிதோஷம் இருப்பவர்களுக்கு நிவர்த்தி செய்யும் தலமாக விளங்குவதால் வருடந்தோறும் இங்கு கூட்டம் அலைமோதும். இந்தக் கோவிலின் பிரம்மோற்சவம் இந்த ஆண்டு மே மாதம் 29-ஆம் தேதி கொடியாற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவத்தில் அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருள்வது, தியாகராஜர் ஆட்டம் போன்ற சிறப்பு நகழ்வுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய அம்சமாக இன்று தேரோட்டம் அதிகாலையிலேயே தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து நாளை சனி பகவான் தங்க காக வாகனத்தில் வரும் வீதி உலா நிகழ்ச்சியும் 14-ஆம் தேதி தெப்ப உற்சமும் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகிறார்கள். இதனால் இன்று காரைக்காலில் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.
 

NEXT STORY