திருப்பதி தேவஸ்தானத்தில் தங்க நாணயங்கள் விற்பனை, எங்கே கிடைக்கும்?

ஆன்மிகம்
Updated Apr 30, 2019 | 15:43 IST | டைம்ஸ் நவ் தமிழ்

வரும் மே-7 ஆம் தேதி அட்சய திருதியை வருவதால், பக்தர்கள் தங்க நாணயங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

tirumala tirupati temple selling gold coins with perumal face
திருப்பதி கோயிலில் தங்க நாணயங்கள் விற்பனை  |  Photo Credit: Getty Images

திருப்பதியில் புதிதாக தங்க நாணயங்கள் விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த நாணயங்கள் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் உள்ள கவுண்டரில் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறது தேவஸ்தானம். 

இந்த நாணயங்களில் விலை அன்றாடம் நிர்ணயிக்கப்படும் தங்கம் வெள்ளியின் விலையைப் பொருத்து மாறுபடும். இதன் சிறப்பம்சம் நாணயங்களில் திருப்பதி ஏழுமலையான் மற்றும் தாயாரின் படம் பொறித்து விற்பனை ஆகிறது.

தங்க நாணயங்கள் 2 கிராம், 5 கிராம், 10 கிராம்களில் கிடைக்கிறது. வெள்ளி டாலர்கள் 5 கிராம், 10 மற்றும் 50 கிராம்களில் கிடைக்கும். இந்த நாணயங்களை திருப்பதி கோயிலே விற்பனை செய்வதால் மக்கள் விருப்பமுடன் வாங்கி செல்கிறார்கள். 

திருப்பதியில் வாகன மண்டபத்துக்கு அருகில் உள்ள கவுண்டரில் கிடைக்கும் எனத் திருமலை தேவஸ்தானம் தெரிவித்திருக்கிறது. இது கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு அருகில் இருக்கிறது. காலை 10.30 மணிமுதல் மாலை 6.00 மணிவரை விற்பனை செய்யப்படும் இந்த நாணயங்கள் முழுக்க ஆந்திரா சிண்டிகேட் பாங்கின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. 

வரும் மே-7 ஆம் தேதி அட்சய திருதியை வருவதால், பக்தர்கள் தங்க நாணயங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

NEXT STORY
திருப்பதி தேவஸ்தானத்தில் தங்க நாணயங்கள் விற்பனை, எங்கே கிடைக்கும்? Description: வரும் மே-7 ஆம் தேதி அட்சய திருதியை வருவதால், பக்தர்கள் தங்க நாணயங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola