’திருவாரூர் தேரழகு’ - நான்கு வீதிகளிலும் ஆடிஅசைந்து பக்தர்களை சிலிர்க்க வைத்த திருவாரூர் ஆழித்தேரோட்டம்!

ஆன்மிகம்
Updated Apr 01, 2019 | 12:23 IST | Times Now

இன்று காலை 5 மணியிலிருந்தே முதலில் விநாயகர் தேர் வடம் பிடித்திழுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேரடியிலிருந்து ஆழித்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

thiruvarur, திருவாரூர்
திருவாரூர் ஆழித்தேர்   |  Photo Credit: Twitter

திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற சைவ திருத்தலங்களின் தலைமை பெற்ற ஸ்தலமான திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ’ஆழித்தேர்’ எனப்படும் திருத்தேரோட்டம் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்திழுக்க கோலாகலமாக நடைபெற்றது. 

உலகளவில் பிரசித்தி பெற்றதும், ஆசியாவிலேயே உயரமான தேர்களில் ஒன்றுமாக பிரபலமானது திருவாரூர் ஆழித்தேர். ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழாவில் ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று காலை 5 மணியிலிருந்தே முதலில் விநாயகர் தேர் வடம் பிடித்திழுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நான்கு வீதியில் அமைந்துள்ள தேரடியிலிருந்து ஆழித்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் கிட்டதட்ட 96 அடி. 300 டன் எடையுள்ள இத்தேரைத் தாங்கி இழுக்கும் வகையில் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ’ஆடாதும் ஆடி பாகற்காய் பறிக்கும் தியாகர்’ என்கிற சொலவடை இறைவர் தியாகராஜப்பெருமான், அம்பாள் அல்லியம்பூங்கோதை சமேதராக திருவாரூர் தேரில் ஆடிஅசைந்து திரு உலா வருவதையே குறிக்கிறது. 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்து திருவாரூரில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அரூரானுக்கு அரோகரா’ என்று வானும், மண்ணும் அதிரும் வகையில் பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து இழுக்க அலங்காரப் பட்டுத்துணிகளும், பூச்சரங்களும் அசைந்தாட திரூவாரூரான் அமர்ந்திருந்த ஆழித்தேர் ஆடி அசைந்து நான்கு வீதிகளிலும் வலம் வந்த திருவாரூர் தேரினை மெய்சிலிர்க்க, மனம் மகிழ கண்டு தரிசித்தனர் பக்தர்கள். 

NEXT STORY
’திருவாரூர் தேரழகு’ - நான்கு வீதிகளிலும் ஆடிஅசைந்து பக்தர்களை சிலிர்க்க வைத்த திருவாரூர் ஆழித்தேரோட்டம்! Description: இன்று காலை 5 மணியிலிருந்தே முதலில் விநாயகர் தேர் வடம் பிடித்திழுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேரடியிலிருந்து ஆழித்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola