ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம் கோலாகலம்!

ஆன்மிகம்
Updated May 03, 2019 | 15:29 IST | Times Now

’விருப்பன் திருநாள்’ எனப்படும் சித்திரை திருநாள் இக்கோயிலில் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

tamil nadu, தமிழ்நாடு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர்  |  Photo Credit: Twitter

திருச்சி: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் சித்திரை தேரோட்ட பெருவிழா பக்தர்கள் வெள்ளத்திற்கு இடையே இன்று நடைபெற்றது. 

சித்திரை திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று ஆயிரமாயிரம் பக்தர்கள் ஒன்றுகூடி, ‘கோவிந்தா கோபாலா அரங்கநாதா’ என்கிற கோஷத்துடன் பக்தி பரவசமாக திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில். 108 வைஷ்ணவத் தலங்களில் இது முதன்மையானது. இக்கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர்.

’விருப்பன் திருநாள்’ எனப்படும் சித்திரை திருநாள் இக்கோயிலில் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 25ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக கண்ணாடி அறையில் இருந்து வெளிவந்து ரங்கநாதர் திருத்தேரில் எழுந்தருளினார். 

பத்து நாட்கள் நடைபெற்ற இந்த சித்திரை திருவிழாவில் நம்பெருமாள் கருட வாகனம், யாளி வாகனம், குதிரை வாகனம், தங்க வாகனம் என பல்வேரு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு வீதி உலா வந்து அருள் பாலித்தது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம் கோலாகலம்! Description: ’விருப்பன் திருநாள்’ எனப்படும் சித்திரை திருநாள் இக்கோயிலில் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola