காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஆன்மிகம்
Updated Jul 05, 2019 | 16:33 IST | Times Now

அத்திவரதர் தரிசனத்திற்காக காஞ்சிபுரத்திற்கு நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Athivarathar Dharisanam
அத்திவரதர் தரிசனம்  |  Photo Credit: Twitter

காஞ்சிபுரம்: அத்திவரதர் தரிசனத்திற்காக நாளை முதல் காஞ்சிபுரத்திற்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அத்திவரதர் வைபவம் திங்கள் அன்று தொடங்கியது. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க மக்கள் கூட்டம் கூட்டமாய் வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் அல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே காஞ்சிபுரத்திற்கு நாளை முதல் தினந்தோறும் 6 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. 

சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் இருந்து காஞ்சிபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. முதலாவது சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து காலை 4.15 மணிக்கு காஞ்சிபுரத்திற்கு புறப்படும். மற்றொரு ரயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 4.25 மணிக்கு புறப்பட உள்ளது. செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரத்திற்கு காலை 10 மணி, மதியம் 12 மணி, பிற்பகல் 3.10 மணி மற்றும்  மாலை 5.00 மணக்கு என 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 7.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.           

கடைசியாக 1979 -ஆம் ஆண்டு பக்தர்களுக்கு காட்சி அளித்த அத்திவரதர் தற்போது 2019-இல் காட்சி அளித்து வருகிறார். இந்த தரிசனத்தை தவற விட்டால் இதோடு 2049-இல் தான் அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால் மக்கள் கூட்டம் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் அலைமோதுகிறது. இந்நிலையில் இந்த சிறப்பு ரயில்களின் இயக்கம் பக்தர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NEXT STORY
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு Description: அத்திவரதர் தரிசனத்திற்காக காஞ்சிபுரத்திற்கு நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola