அத்தி வரதர் தரிசனம்: சிறப்பு கட்டணம் ரத்து - ஆட்சியர் அறிவிப்பு

ஆன்மிகம்
Updated Jul 02, 2019 | 20:27 IST | Times Now

அத்தி வரதர் தரிசனம் நிறைவடையும் வரை அனைத்து பக்தர்களும் பொது தரிசன வழியாக சென்று தரிசனம் செய்யலாம். 50 ரூபாய் சிறப்பு கட்டணம் தரிசனத்தை ரத்து செய்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Athi varadar, அத்தி வரதர்
அத்தி வரதர்  |  Photo Credit: Twitter

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக 50 ரூபாய் சிறப்பு கட்டணம் தரிசனத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் தரிசன திருவிழா திங்கட்கிழமை கோலகலமாக தொடங்கியது. கோயிலின் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அத்தி வரதர் ஆகஸ்ட் 17- ஆம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 30 நாட்கள் சயன கோலத்திலும், அதைத் தொடர்ந்து 18 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிக்க உள்ளார். 

இந்த விழாவின் முதல் நாளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரண்டாவது நாளான இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விஐபிக்கள் தினமும் காலை 6 முதல் 9 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

அத்தி வரதரை தரிசிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக ஓரிக்கை, ஒளிமுகமது பேட்டை, பச்சையப்பன் ஆடவர் கல்லூரி ஆகிய 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளி மாநில பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி தகவல்களை தெரிந்து கொண்டனர். 

இதற்கிடையில் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்தவதற்கு வசதியாக 50 ரூபாய் சிறப்பு கட்டணமாக அறநிலைத்துறை சார்பில் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிறப்பு 50 ரூபாய் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். இதையடுத்து அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தின் அடிப்படையிலேயே இனிவரும் 48 நாள்களிலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

NEXT STORY
அத்தி வரதர் தரிசனம்: சிறப்பு கட்டணம் ரத்து - ஆட்சியர் அறிவிப்பு Description: அத்தி வரதர் தரிசனம் நிறைவடையும் வரை அனைத்து பக்தர்களும் பொது தரிசன வழியாக சென்று தரிசனம் செய்யலாம். 50 ரூபாய் சிறப்பு கட்டணம் தரிசனத்தை ரத்து செய்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola