அத்தி வரதரை எப்படி தரிசிக்கலாம் ? முழு விவரம் இங்கே !

ஆன்மிகம்
Updated Jul 01, 2019 | 18:08 IST | Times Now

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதரை யார்? எப்படி? எப்போது? தரிசிக்கலாம் என்பது குறித்த முழு தொகுப்பை இந்த பகுதியில் காணலாம்.

Athi Varadar, அத்தி வரதர்
அத்தி வரதர்  |  Photo Credit: Twitter

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் தரிசன திருவிழா இன்று கோலகலமாக தொடங்கியது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் தரிசன திருவிழா இன்று கோலகலமாக தொடங்கியது. வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதர் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 30 நாட்களுக்கு சயன கோலத்திலும், அதைத் தொடர்ந்து 18 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிப்பார். 

அத்திவரதர் திருவிழாவையொட்டி , தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக, 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அத்திவரதர் தரிசனத்துக்கான முழு விவரம்:

 • உள்ளுர் பக்தர்கள் ஜூலை 1 முதல் 3 வரை 12.07.2019 முதல் 24.07.2019 வரை 05.08.2019 முதல் 12.08.2019 வரை 16.08.2019 மற்றும் 17.08.2019 உள்பட தங்களுக்கு குறிப்பிட்ட 26 நாட்களுக்கு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம். 
 • உள்ளுர் பக்தர்கள் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்து முன்பதிவு செய்த பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இந்த தரிசனம் செய்ய உள்ளுர் மக்கள் தங்கள் வார்டு சேவை மையத்தில் பாஸ் வாங்க வேண்டும் (கட்டணம் ஏதும் இல்லை) 
 • வெளியூர் பக்தர்கள் 48 நாட்களும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச அல்லது ரூ. 50 சிறப்பு கட்டணம் மூலம் தரிசனம் செய்யலாம். இதற்கு ஆதார் கார்டு தேவை இல்லை 
 • ரூ. 50 தரிசன டிக்கெட் கோயிலின் மேற்கு கோபுரம் அருகிலே கிடைக்கும், ரூ. 50 கட்டண தரிசனம் டிக்கெட் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியாது. நேரில் வந்து வாங்கி தரிசனம் செய்யலாம் 
 • உள்ளூர் பக்தர்கள் இந்த இலவச அல்லது ரூ. 50 டிக்கெட் மூலம் தரிசனம் செய்யலாம். ஆனால், உள்ளூர் சிறப்பு தரிசன பாஸ் மூலம் ஒரு முறை மட்டுமே ஆதார் வைத்து தரிசனம் செய்ய முடியும். 
 • விஐபிக்கள் தினமும் காலை 6 முதல் 9 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இதற்காக 14 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 • www.tnhrce.org என்ற இணைய முகவரி மூலம் ரூ.500 தரிசன டிக்கெட்டிற்கு வரும் 02.07.2019 முதல் பதிவு செய்யலாம். ஆனால் ஒரு நாளைக்கு அதில் 500 நபர்கள் மட்டுமே அனுமதி (11 மணிக்கு - 250 நபர்கள், 3 மணிக்கு - 250 நபர்கள்) 
 • இலவச தரிசனம் மற்றும் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி வரும் பக்தர்கள் கிழக்கு கோபுர வாசல் வழியாக அனுமதிக்கப்படுவர். 
 • வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் பஸ் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு வந்து செல்ல மினி பேருந்துகள், வேன், ஷேர் ஆட்டோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மினி பேருந்துகளில் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்.
 • வயதானவர்கள், ஊனமுற்றோர் தரிசனம் செய்ய சிறப்பு வழி செய்யப்பட்டுள்ளது . அவர்கள் கிழக்கு கோபுரம் வாசல் வழியாக வசந்த மண்டபத்திற்கு அழைத்துசெல்லப்படுவார்கள். இதற்காக பேட்டரி கார்கள் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 • வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக ஓரிக்கை, ஒளிமுகமது பேட்டை, பச்சையப்பன் ஆடவர் கல்லூரி ஆகிய 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 • கோயிலுக்கு வரும் பக்தர்கள் கார் பார்கிங் செய்ய தனி இடம் (திருவீதி பள்ளம் - திருச்சோலை தெரு) அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கே மட்டுமே கார் நிறுத்த முடியும், கோயில் அருகில் அனுமதி இல்லை. 
NEXT STORY