சேகர் ரெட்டிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் பதவி

ஆன்மிகம்
Updated Sep 20, 2019 | 15:22 IST | Times Now

கடந்த 2016-ல் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்கு தற்போது மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Sekar Reddy, சேகர் ரெட்டி
சேகர் ரெட்டி 

சென்னை: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் சேகர் ரெட்டிக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராகவும், தமிழக ஆலோசனைக் குழு தலைவராகவும் சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2016-ல் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்கு தற்போது மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் புதிய தலைவராக ஒய்.வி சுப்பா ரெட்டி என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இவர், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவிற்கு புதிதாக 29 பேர் நியமிக்கப்பட்டனர். உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுபினர் குமரகுரு, இந்தியா சிமெண்ட்ஸ் குழும தலைவர் சீனிவாசன், இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் சுதா மூர்த்தி ஆகியோர் இதில் அடங்குவர். இதனை தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளர்களாக சேகர் ரெட்டி உள்ளிட்ட 7 பேர் நியமிக்கப்பட்டனர்.

கருணாகர் ரெட்டி - திருப்பதி, ராகேஷ் சின்ஹா - டெல்லி, குபேந்தர் ரெட்டி - பெங்களூரு, கோவிந்தா ஹரி - ஹைதராபாத், துஷ்மந்த் குமார் தா - புவனேஷ்வர், அமோல் காலே - மும்பை ஆகியோரும் திருப்பதி தேவஸ்தான சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு அழைப்பாளர்களுக்கு தேவஸ்தானத்தில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் மீது வாக்களிக்கும் உரிமை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY