திருவண்ணாமலை தீபம்: டிசம்பர் 1இல் கொடியேற்றம், 10ஆம் தேதி மகாதீபம்!

ஆன்மிகம்
Updated Nov 13, 2019 | 17:16 IST | Times Now

லட்சக்கணக்கானோர் குவியும் இந்த மாபெறும் விழா வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவண்ணாமலை தீபம்
திருவண்ணாமலை தீபம்  |  Photo Credit: Twitter

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வருடம்தோறும் கார்த்திகை மாத தீபத் திருநாள் அன்று மலையில் மகா பரணி தீபம் ஏற்றப்படுவது வழக்கம். லட்சக்கணக்கானோர் குவியும் இந்த மாபெறும் விழா வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக திருவண்ணாமலை உள்ளது. எப்படி மதுரைக்கு கள்ளழகர், பழனிக்கு தைப்பூசம், திருப்பதிக்கு புரட்டாசி பிரம்மோற்சவமோ அதேபோல திருவண்ணாமலைக்கு இந்த கார்த்திகை பிரம்மோற்சவம். கார்த்திகை மாதம் அதாவது டிசம்பர் 1ஆம் தேதி இந்த ஆண்டு பிரம்மோற்சவம் தொடங்குகிறது. அன்றைய தினம் அதிகாலை 5:30 மணிக்கு கோவில் கொடிமரத்தில் விழாவுக்கான கொடியேற்றம் துவங்குகிறது.

அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான வெள்ளி ரத பவனி டிசம்பர் 6ஆம் தேதியன்றும் டிசம்பர் 7 அன்று மகா தேரோட்டமும் நடைபெறுகிறது. டிசம்பர் 10ஆம் தேதி திருக்கார்த்திகைத் திருநாளில் அதிகாலை 4 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த விழாவுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
 

NEXT STORY