வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை 14ம் தேதியன்று திறப்பு!

ஆன்மிகம்
Updated May 12, 2019 | 15:46 IST | Times Now

வைகாசி மாத பூஜைக்காக வரும் 14ம் தேதியன்று மாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட உள்ளது. திருத்தலத்தின் மேல்சாந்தி, நடையை திறந்து தீபாராதனை காட்ட உள்ளார்.

india, இந்தியா
சபரிமலை ஐய்யப்பன் கோயில்  |  Photo Credit: Twitter

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, சிறப்பு பூஜைகளை ஒட்டி வருகின்ற 14ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று திறக்கப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை, ஒவ்வொரு தமிழ் மாதமும் திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.  

அவ்வகையில் வைகாசி மாத பூஜைக்காக வரும் மே 14ம் தேதியன்று மாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட உள்ளது. திருத்தலத்தின் மேல்சாந்தி, நடையை திறந்து தீபாராதனை காட்ட உள்ளார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. 

பின்னர், மறுநாள் அதிகாலையளவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பிறகு வருகின்ற 19ம் தேதியன்று இரவு 10 மணிக்கு மீண்டும் நடை சார்த்தப்பட உள்ளது. 

மீண்டும், பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 11ம் தேதி மாலை 5 மணியளவில் நடை திறக்கப்படுகிறது. 12ம் தேதி பிரதிஷ்டை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று மீண்டும் ஆனி மாதம் பூஜைக்காக, ஜூன் 15ம் தேதி மாலை 5 மணியளவில் நடை திறக்கப்படுகிறது. 20ம் தேதி வரை ஆனி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. 

NEXT STORY
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை 14ம் தேதியன்று திறப்பு! Description: வைகாசி மாத பூஜைக்காக வரும் 14ம் தேதியன்று மாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட உள்ளது. திருத்தலத்தின் மேல்சாந்தி, நடையை திறந்து தீபாராதனை காட்ட உள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola