சபரிமலை மகர விளக்கு பூஜையையொட்டி வரும் நவம்பர் 16ஆம் தேதி சபரிமலை ஐய்யப்பன் கோயில் திறக்கப்பட உள்ளது.
ஆண்டுதோறும் ஐய்யப்ப பக்தர்கள் கார்த்திகை, மார்கழி மாத சமயத்தில் சபரிமலை கோயிலுக்கு மாலையிட்டு விரதம் இருந்து சபரிமலைக்கு இடுமுடி கட்டி பாதயாத்திரை செல்வார்கள். மற்ற மாதங்களில் பூஜைகளுக்கு மட்டுமே திறக்கப்படும் சபரிமலை இந்த காலங்களில்தான் தொடர்ந்து மாதக்கணக்கில் திறந்திருக்கும்.
அப்படி இந்த வருடம் சபரிமலைக் கோயில் நடை நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இடவு 10 மணிக்கு
நடை மூடப்படும். பின் அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் தொடங்கும். மகர விளக்குப் பூஜை வரும் ஜனவரி 15ஆம் தேதியும் மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதியும் நடைபெறும்.
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்ற வாரத்தில் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் சுமார் 300 சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர். பல மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு 379 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பம்பைக்கும் நிலக்கலுக்கும் இடையே 210 தினசரி சேவைகளை கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள் இயங்கயிருக்கின்றன.
சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் ப்ளாஸ்டிக் பொருட்களோடு ப்ளாஸ்டிக் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிக்கு வரும் பக்தர்களுக்காக தினசரி சுத்தமான குடிநீரும், சுக்கு தண்ணீரும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சபரிமலையில் தங்கி தரிசனம் செய்ய விரும்புவோம் இந்த லிங்கில் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம்.