சித்திரை மாத பூஜைக்காக சபரிமலையில் இன்று மாலை நடைதிறப்பு!

ஆன்மிகம்
Updated Apr 10, 2019 | 08:55 IST | Twitter

சித்திரை மாதப் பிறப்புக்காகவும், கேரளப் புத்தாண்டான விஷூ பண்டிகையும் வரும் 15-ஆம் தேதி வருவதால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணி முதல்நடை திறக்கப்படுகிறது.

sabarimala ayyappan temple
sabarimala ayyappan temple  |  Photo Credit: Getty Images

சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிமுதல் வரும் 19-ஆம் தேதி வரை திறக்கப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களுக்கு சபரிமலையில் நடை பூஜைகளுக்காகத் திறக்கப்படுவது வழக்கம். கடந்த மார்ச் மாதம், 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை பங்குனி மாதத்தின் தொடக்க தினங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சித்திரை மாதப் பிறப்புக்காகவும், கேரளப் புத்தாண்டான விஷூ பண்டிகையும் வரும் 15-ஆம் தேதி வருவதால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணி முதல்நடை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் அதிகாலை முதல் பூஜைகள் வழக்கமாக நடைபெறும். பத்து நாட்கள் திறந்திருக்கும் நடை வரும் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு 10 மணி அளவில் சாத்தப்படுகிறது.

வரும் 15ம் தேதி கொண்டாடப்படும் விஷு பண்டிகை அன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு விஷூக்கனி காண ஏற்பாடு செய்யப்படும். மேலும் மேல்சாந்தி, தந்திரி உள்ளிட்டோர் பக்தர்களுக்கு நாணயங்களையும் வழங்குவார்கள். ஏப்ரல் 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு சாத்தப்படும் நடை  வைகாசி மாத பூஜைக்காக மே 14ம் தேதி முதல்19ம் தேதி வரை நடை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
சித்திரை மாத பூஜைக்காக சபரிமலையில் இன்று மாலை நடைதிறப்பு! Description: சித்திரை மாதப் பிறப்புக்காகவும், கேரளப் புத்தாண்டான விஷூ பண்டிகையும் வரும் 15-ஆம் தேதி வருவதால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணி முதல்நடை திறக்கப்படுகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola