சந்திரயான் 2 வெற்றிகரமாக தரையிறங்க சந்திரனார் கோவிலில் பிரார்த்தனை

ஆன்மிகம்
Updated Sep 06, 2019 | 16:03 IST | Times Now

”சந்திரயான் 2 முதலில் ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுவதாக திட்டமிடப்பட்டது. அப்போது நாங்கள் எந்த சிறப்பு பூஜையும் செய்யவில்லை. பிறகு ராக்கெட் ஏவுதல் தள்ளிவைக்கப்பட்டது.”

Chandrayaan 2, சந்திரயான் 2
சந்திரயான் 2  |  Photo Credit: Shutterstock

தஞ்சாவூர்: சந்திரயான் 2 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டி, தஞ்சை மாவட்டம் சந்திரனார் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

”சந்திர பகவானின் அருள் பெற சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்று ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலின் மேலாளர் வி.கண்ணன் கூறினார்.

முன்னதாக, 2008-ல் சந்திரயான் 1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட போதும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதாக கண்ணன் கூறினார்.

மேலும் பேசிய கண்ணன்: சந்திரயான் 2 முதலில் ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுவதாக திட்டமிடப்பட்டது. அப்போது நாங்கள் எந்த சிறப்பு பூஜையும் செய்யவில்லை. பிறகு ராக்கெட் ஏவுதல் தள்ளிவைக்கப்பட்டது. நாங்கள் பிரார்த்தனை செய்யாததால் தான் தொழிற்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கருதினோம். எனவே, ஜூலை 22-ஆம் தேதி சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் முன்னர் சிறப்பு பிரார்த்தனை, அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடத்தப்பட்டது. இவ்வாறு கண்ணன் கூறினார்.

ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் மூலவராக சிவபெருமான் உள்ளார். சந்திரபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. கும்பகோணம் பகுதியில் காணப்படும் நவக்கிரக ஸ்தலங்களில் சந்திரனார் கோவில் என்றழைக்கப்படும் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலும் ஒன்றாகும். தினமும் 500 பக்தர்கள் வந்து வழிபடும் சந்திரனார் கோவிலில் திங்கட்கிழமைகளில் மட்டும் 5,000 பேர் வருகை தருகின்றனர்.

NEXT STORY