பழனி ‘நவபாஷண’ முருகன் சிலை..மர்மம் என்ன?

ஆன்மிகம்
Updated Apr 01, 2019 | 15:57 IST | Times Now

நவபாஷண மூர்த்தியை செய்து முடித்த போகர், அதை பிரதிஷ்டை செய்ய செவ்வாயின் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதியைத் தேடினார். அப்போது, அதற்கு பொருத்தமான இடமாக கிடைத்துள்ளது பழனி மலை. 

Palani murugan temple
Nava Bhashana murugan statue history   |  Photo Credit: Twitter

சென்னை: செந்திலாண்டவனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் கோவில் கொண்டிருக்கும் முருகனின் நவபாஷண சிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்தாலும், ஒருகாலத்தில் இங்கு நவபாஷண சிலைதான் மக்களுக்கு அருமருந்தாக காட்சியளித்துள்ளது. ‘நவபாஷண சிலை’ என்கிற சொற்றொடரே இன்றுவரை பல மர்மங்களைத் தன்னுள்ளே அடக்கியது. 

உலகளவில் பிரசித்தி பெற்ற பழனி மலைக்கு பழமையான சிறப்புப் பெயர் ‘திரு ஆவினன் குடி’. இந்தப் பழனி மலையின் மீது குடிகொண்டிருக்கும் தண்டாயுதபாணி தெய்வமே நவபாஷணம் என்கிற ஒன்பது வகையான விஷம் நிறைந்த மூலிகைகளால் செய்யப்பட்டது என்பது காலங்காலமாக நிலவி வருகின்ற உண்மையான நம்பிக்கை. 

18 சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் போகர், தனது சீடரும் மற்றொரு சித்தருமான புலிப்பாணியுடன் இணைந்து கன்னிவாடியில் அமைந்திருக்கும் மெய் கண்ட சித்தர் குகையில்தான் இந்த நவபாஷண சிலையைச் செய்தார் என்பது வரலாறு. 

நவபாஷணம் என்பது, கார்முகில், ரச செந்தூரம், வெள்ளை பாஷணம், ரத்த பாஷணம், கம்பி நவரசம், குதிரைப் பல், லிங்கம், கெளரி பாஷணம், சீதை பாஷணம் என்கிற ஒன்பது வகையான மிக அபூர்வமான மூலிகைகளையும், விஷங்களையும் கொண்டு மிகக்கடினமான செய்முறைகளால் உருவாக்கப்படுவது. இம்மூலிகைகளை இனம்கண்டறியும் திறன் பழங்கால சித்தமருத்துவர்களுக்குக் கூட கிடையாது என்பதுதான் உண்மை. 

நவபாஷண மூர்த்தியை செய்து முடித்த போகர், அதை பிரதிஷ்டை செய்ய செவ்வாயின் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதியைத் தேடினார். அப்போது, அதற்கு பொருத்தமான இடமாக கிடைத்துள்ளது பழனி மலை. 

நவபாஷண சிலையின் சிறப்பம்சமே மனிதனுக்கு ஏற்படுவது போல இரவில் இச்சிலைக்கு வியர்வை வெளியேறும்.  ‘விஷத்திற்கு விஷமே மருந்து’ என்பது போல நவபாஷண திருமேனியில் இருந்து வெளியேறும் அவ்வியர்வை பல்வேறு நோய்களைக் குணமாக்கக் கூடியது.

அதனால், இரவில் நடைபெறும் ராக்கால பூஜையின் போது சிலையின் மேனி முழுவதும் சந்தனம் பூசப்படுவதுடன், சிலைக்கு அடியில் வியர்வையை பிரசாதமாக சேகரிக்க ஒரு பாத்திரமும் வைக்கப்படும். 

மறுநாள் அதிகாலையில் சிலையின் மேனியில் உள்ள சந்தனம் வழித்தெடுக்கப்படும் போது அச்சந்தனத்தில் வியர்வைத் துளிகள் பச்சை நிறமாக ஒட்டிக் கொண்டிருக்குமாம். மேலும், கீழே வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலும் நீர் நிரம்பியிருக்குமாம். இது ‘கெளபீனத் தீர்த்தம்’ என்று அழைக்கப்படும். இந்த நீரும், சந்தனமும் உலகெங்கிலும் காணக் கிடைக்காத அதிசயமான அருமருந்து. இச்சந்தனமும், நீரும் காலை 4 மணி முதலே கோவிலில் குவிந்திருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பு!


 

NEXT STORY
பழனி ‘நவபாஷண’ முருகன் சிலை..மர்மம் என்ன? Description: நவபாஷண மூர்த்தியை செய்து முடித்த போகர், அதை பிரதிஷ்டை செய்ய செவ்வாயின் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதியைத் தேடினார். அப்போது, அதற்கு பொருத்தமான இடமாக கிடைத்துள்ளது பழனி மலை. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola