பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு!

ஆன்மிகம்
Updated Jun 23, 2019 | 13:26 IST | Times Now

புதுச்சேரியை அடுத்துள்ள பஞ்சவடியில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

கோலாகலமாக நடைபெற்ற பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் மகாகும்பாபிஷேகம்
கோலாகலமாக நடைபெற்ற பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் மகாகும்பாபிஷேகம்  |  Photo Credit: Twitter

புதுச்சேரி: புதுச்சேரியை அடுத்துள்ள பஞ்சவடியில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பக்திப் பரவசத்துடன் கலந்துகொண்டனர். 

பஞ்சவடியில் 36 அடி உயரமுள்ள விஸ்வரூப ஜெய மங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. மகா கணபதி, ராமர் ஆகியோருக்கு இங்கு தனித்தனியே சன்னிநிதிகள் இருந்த நிலையில், கடந்த மே மாதம் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதிக்கு புதிதாக சன்னதி அமைக்கப்பட்டது. 

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தநிலையில், இன்று காலை ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு புனித நீர் உற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மகா தீபாராதனையும் நடைபெற்றது.  இந்த கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டனர்.

மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.  மண்டலாபிஷேக பூஜைகள் ஜூன் 24 ம் தேதி தொடங்கி, வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை 48 நாட்கள் நடைபெற உள்ளன.

NEXT STORY
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு! Description: புதுச்சேரியை அடுத்துள்ள பஞ்சவடியில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola