அறுபடை வீடுகளில் ஒன்றான உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் பிரசாதமான பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பழனி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பழனியில் உள்ளது புகழ்பெற்ற தண்டாயிதபானி முருகன் கோவில். அறுபடை வீடுகளில் ஒன்றான இங்கு முருகன் நிராயுதமாணியாக வீற்றிருக்கிறார். திருப்பதி லட்டு போல இங்கே பஞ்சாமிர்தம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இது வெறும் பிரசாதமாக மட்டும் இல்லாமல் இந்த பஞ்சாமிர்தத்துக்கு மருத்துவ பலன்களும் உண்டு என்று கூறி இதற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது பழனி கோயிலின் பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக் கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதத்துக்குப் புவிசார் குறியீடு வழங்கப் படுவது இதுவே முதல்முறையாகும். இதனால் பழனி மக்களும் முருகன் கோவில் பக்தர்களும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
புவிசார் குறியீடு என்றால் என்ன ?
ஒரு பகுதியில் மட்டும் இருக்கும் அடையாளங்களைப் புவிசார் குறியீடு என்கிறோம். காஞ்சிபுரம் சேலை, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, சேலம் மாம்பழம், தஞ்சை ஓவியம், பத்தமடை பாய், மதுரை சுங்குடி, திருப்பதி லட்டு போன்றவை ஏற்கவே புவிசார் குறியீடு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி புவிசார் குறியீடுகள் பெற்றா பொருட்களை வேறு இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்துவது குற்றமாகும்.