பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்! லட்சக்கணக்கானோர் தரிசனம்

ஆன்மிகம்
Updated Apr 19, 2019 | 08:03 IST | டைம்ஸ் நவ் தமிழ்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது.

மதுரை திருவிழா
மதுரை திருவிழா  |  Photo Credit: Twitter

உலகப் புகழ்பெற்ற திருவிழாவான மதுரைச் சித்திரத் திருவிழாவின் முக்கியன நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவன் இன்று காலை நடைபெற்றது. வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி இறங்கியத்தை லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.

கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  11-ஆம் நாளான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. நேற்று விழாவையொட்டி தேர்தல் நாளில் மக்கள் வாக்களிக்க கூடுதலாக இரண்டு மணிநேரம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. நேற்றில் இருந்து கள்ளழகர் வழி நெடுகிலும் மக்களுக்கு தரிசனம் கொடுத்து வருவது வழக்கம். அதனால் மக்கள் வழிநெடுகிலும் விடியவிடியக் காத்திருந்து தரிசம் செய்தனர். எங்கெங்கிலும் அன்னதானம் நடைபெற்றுக்கொண்டே இருந்தது. 

சித்திரா பௌர்ணமியான் இன்று அதிகாலை ஆறு மணியளவில் தங்க குதிரையில் பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். இதனை சுமார் பத்து லட்சம் மக்கள் கண்டுகளித்தனர். இந்த விழாவைப்பார்ப்பதற்காம பல வெளிநாட்டினரும் மதுரையில் குவிந்துள்ளனர். 

NEXT STORY
பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்! லட்சக்கணக்கானோர் தரிசனம் Description: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola