மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கியது.. திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆன்மிகம்
Updated Apr 18, 2019 | 08:57 IST | Times Now

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

Madurai Chithirai Thiruvizha, மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம்  |  Photo Credit: YouTube

மதுரை: அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களில் மீனாட்சி அம்மனும், சுந்தரேஷ்வரரும் பக்தர்களுக்கு அருள் பாளிக்க நான்கு வீதிகளிலும் பவனி வருகின்றனர்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் புதன்கிழமை கோலாகலமாக நடந்தது.  திருக்கல்யாணத்தையொட்டி மீனாட்சி அம்மன் தங்க அங்கி, பட்டுச்சேலை, வைர கிரீடம், மூக்குத்தி, பவளக்கல் மாலைகள் அணிந்திருந்தார். சுந்தரேசுவரர் வெண்பட்டும், வைர கிரீடமும் அணிந்திருந்தார். 

திருவிழாவின் 11-ம் நாளான இன்று தேரோட்டம் காலை தொடங்கியது. இதற்காக கீழமாசி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தேர்களில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் இன்று அதிகாலை எழுந்தருளினர். முதலில் சுவாமி சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் உள்ள பெரிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மங்கள வாத்தியங்கள், மேளதாளம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க பக்தர்கள் வெள்ளத்தில் தேர் மிதந்து வந்தது. 

சுவாமி தேர் புறப்பட்ட சிறிது நேரத்தில், மீனாட்சி அம்மனின் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களில் மீனாட்சி அம்மனும், சுந்தரேஷ்வரரும் பக்தர்களுக்கு அருள் பாளிக்க நான்கு வீதிகளிலும் பவனி வருகின்றனர். தேரோட்டத்தையொட்டி மதுரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க மதுரை நகரம் போலீஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

NEXT STORY
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கியது.. திரளான பக்தர்கள் பங்கேற்பு Description: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola