கொடியேற்றத்துடன் கோலகலமாக துவங்கியது மதுரை சித்திரை திருவிழா!

ஆன்மிகம்
Updated Apr 08, 2019 | 14:35 IST | Times Now

சித்திரை திருவிழா துவங்கியுள்ளதை அடுத்து தினசரி காலை, மாலை இரண்டு வேளையும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளையும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

madurai temple, மதுரை கோயில்
மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர்  |  Photo Credit: Twitter

மதுரை: மதுரையில் ஒவ்வொரு வருடமும் கோலகலமாக நடைபெறும் உலகப்பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா வைபவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.

மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கம்பத்தடி மண்டப கொடி மரம் அருகே இறைவன், இறைவி பிரியாவிடையுடன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

பின்னர் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் கானமிசைக்க காலை 10.05 மணிக்கு மேல் 10.20க்குள் மிதுன லக்னத்தில், தங்கக் கொடி மரத்தில் உற்சவக் கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது.

இன்று முதல் சித்திரை திருவிழா துவங்கியுள்ளதை அடுத்து தினசரி காலை, மாலை இரண்டு வேளையும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளையும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 15ம் தேதியன்று இரவு 8 மணிக்கு மீனாட்சிக்கு பட்டாபிஷேகமு, 16ம் தேதியன்று திக்விஜயமும் நடைபெறும்.

தொடர்ந்து ஏப்ரல் 17ம் தேதியன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 18ம் தேதியன்று காலை திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான மதுரை அழகர் மலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வருகின்ற 19ம் தேதியன்று காலை நடைபெறுகிறது. ஒரு பக்கம் தேர்தல், மறுபக்கம் சித்திரை திருவிழா என மதுரை மாநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
கொடியேற்றத்துடன் கோலகலமாக துவங்கியது மதுரை சித்திரை திருவிழா! Description: சித்திரை திருவிழா துவங்கியுள்ளதை அடுத்து தினசரி காலை, மாலை இரண்டு வேளையும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளையும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
Loading...
Loading...
Loading...