அத்திவரதரை வைக்கும் அனந்தசரஸ் குளம் நாளை ஆய்வு செய்யப்படுகிறது

ஆன்மிகம்
Updated Aug 06, 2019 | 17:37 IST | Times Now

அத்திவரதரை வைக்கும் அனந்தசரஸ் குளத்தை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court
சென்னை உயர்நீதிமன்றம்  |  Photo Credit: Twitter

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் அத்திவரதரை வைக்கும் அனந்தசரஸ் குளத்தை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்படும் அத்திவரதர், தற்போது பக்தர்களுக்கு காட்சி அளித்து கொண்டிருக்கிறார். அவரை தரிசிக்க மக்கள் கூட்டம் கூட்டமாய் செல்கின்றனர். பல அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் சென்று வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சென்னை மாம்பலத்தை சேர்ந்த அசோகன் என்பவர், அத்திவரதர் வைக்கப்பட்டிருந்த அனந்தசரஸ் குளம் தூர்வாரப்படவில்லை என்றும், தற்போது அத்திவரதர் சிலை வெளியே இருப்பதால் குளத்தை தூர்வார உத்தரவிடக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணை நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று நடந்தது. அத்திவரதர் சிலையை குளத்தை விட்டு எடுப்பதற்கு முன்னமே அனந்தசரஸ் குளம் சுத்தம் செய்யப்பட்டதாக இந்து அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அத்திவரதர் வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளம் முறையாக தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யக் கோரி நீதிபதி பி.டி.ஆதிகேசவலு உத்தரவிட்டார். அதன்படி அரசு வழக்கறிஞர்கள் இருவர் நாளை, ஆகஸ்ட் 7-ஆம் தேதி காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலுக்கு நேரில் சென்று அனந்தசரஸ் குளத்தை ஆய்வு செய்து, ஆகஸ்ட் 8-ஆம் தேதி அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளனர். 

ஜூலை 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சிதந்து வரும் அத்திவரதர், முதலில் சயனக் கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். 40-ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து வெளியே அத்திவரதர் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசிப்பதற்காக வெளியே வைக்கப்பட்டுள்ளார். 

NEXT STORY
அத்திவரதரை வைக்கும் அனந்தசரஸ் குளம் நாளை ஆய்வு செய்யப்படுகிறது Description: அத்திவரதரை வைக்கும் அனந்தசரஸ் குளத்தை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...