அன்னை தெரேசா பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

ஆன்மிகம்
Updated Aug 26, 2019 | 18:14 IST | Times Now

”வெறுப்பது யாராக இருப்பினும், நேசிப்பது நாமாக இருப்போம்,” என்று அன்னை தெரேசா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Peace prayers offered at the Missionaries of Charity in Kolkata, கொல்கத்தாவில் அன்னை தெரேசாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை
கொல்கத்தாவில் அன்னை தெரேசாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை  |  Photo Credit: ANI

’அன்பே சிவம்’ எனும் திரூமுலரின் சொல்லுக்கேற்ப கொல்கத்தாவில் தொழுநோயாளிகளுக்கு தனது இறுதி மூச்சு வரை தன்னலமற்ற சேவை புரிந்த புனிதர் அன்னை தெரேசாவின் பிறந்தநாள் இன்று. உரோமன் கத்தோலிக்க திருச்சபையால் அருளாளராக அறிவிக்கப்பட்ட அன்னை தெரேசா இந்த பூமியில் அவதரித்து இத்துடன் 109 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இன்றைய வடக்கு மாசிடோனியாவின் தலைநகரான ஸ்கோப்ஜேவில் பிறந்தவர் அன்னை தெரேசா. இறைப்பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. வங்காளத்தில் கிறுத்துவ மிஷனரிகளின் சேவை குறித்த கதைகளை சிறு வயது முதலே கேட்டு வந்த அன்னை தெரேசா, அச்சேவையில் தம்மையும் இணைத்துக் கொள்ள விரும்பி இந்தியா வந்தார். இந்திய துணைக்கண்டத்தில் கால் பதிக்கும் போது அவருக்கு வயது 19.

டார்ஜீலிங்கில் பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தபோது 1943-ல் ஏற்பட்ட பஞ்சம், அதன் பின் நிகழ்ந்த ஹிந்து-முஸ்லீம் கலவரங்களால் வங்காளம் நிலைகுலைந்தது. இந்நிலையில், தனது கடமையை உணர்ந்த அன்னை தெரேசா பள்ளிப் பொறுப்பை துறந்து பொதுச்சேவையில் இறங்கினார். வங்காளத்தின் அடையாளமான வெண்ணிற சேலை அணிந்து கொண்டு இந்தியக் குடியுரிமை பெற்றார். ஆதரவற்ற மக்களுக்கு இவர் ஆற்றிய அரும்பெரும் சேவையை போற்றி அமைதிக்கான நொபேல் பரிசும் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவும் வழங்கப்பட்டது.

ஏழையிலும் ஏழையாக வாழ்ந்த மக்கள், எவரும் அருகே கூட செல்லத் தயங்கும் நோயாளிகள் ஆகியோருக்கு இடமளித்து, உணவளித்து, நீராட்டி, ஆடைகளை சுத்தப்படுத்து, உரிய நேரத்தில் மருந்துகள் கொடுத்து மனிதகுளத்தின் மிக உன்னதமான சேவை புரிந்த தன்னார்வலப் படைக்குத் தலைமை தாங்கிய அன்பு தேவதையாம் அன்னை தெரேசாவின் தேவையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பசியும் பகைமையும் சூழ்ந்த இன்றைய உலகில் உணர்கிறோம்.

அன்னை தெரேசாவின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பலர் அவரை நினைவு கூர்ந்தனர். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அன்னை தெரேசாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

 

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: அன்பால் இவ்வுலகை வசப்படுத்திய கருணையின் திருவுருவம் புனிதர் அன்னை தெரசா அவர்களின் பிறந்த தினமான இந்நாளில் #MotherTeresa அவர்கள் வலியுறுத்தியபடி அனைவரிடத்தும் அன்பு செய்திடுவோம்! வெறுப்பது யாராக இருப்பினும், நேசிப்பது நாமாக இருப்போம்!!

 

 

மனித குல மாணிக்கமான அன்னை தெரேசாவின் புகழ் என்றைக்கும் நிலைத்திருக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

 

 

இதே போல, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அன்னை தெரேசாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்ந்தார்.

 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...