ஏழு மாதம் கழித்து ஒரு வழியாக கர்நாட எல்லையை அடைந்தார் கோதண்ட ராமர்!

ஆன்மிகம்
Updated May 22, 2019 | 13:05 IST | Twitter

ஏழு மாதங்களுக்கு முன் திருவண்ணாமலையில் இருந்து கிளம்பிய கோதண்ட ராமர் இன்று கர்நாட எல்லையான அத்திபள்ளியைக் கடந்தார்.

கோதண்ட ராமர் சிலை
கோதண்ட ராமர் சிலை  |  Photo Credit: Twitter

பெங்களூரில் நிறுவுவதற்காகத் திருவண்ணாமலையில் தயாரானது 350 டன் எடை கொண்ட கோதண்டராமர் சிலை. 64 அடி உயரத்தில் 26 அடி அகலத்தினால கல்லில் சிலை வடிக்கப்பட்டது. முகம் மற்றும் கைகள் மட்டுமே இங்கே வடிக்கப்பட்டது. ஆதிசேஷனும் சிலையில் மீது பாகங்களும் பெங்களூரில் வடிக்கப்பட இருக்கிறது. இவையெல்லாம் நடந்தது எப்போது தெரியுமா சென்ற ஆண்டு டிசம்பர் மாதம்!

அதன்பின் தான் சிக்கல் தொடங்கியது. 350 டன் எடையை திருவண்ணாமலியில் இருந்து கர்நாடகாவுக்கு எப்படி சிலையைக் கொண்டு செல்வது என்பதுதான் அது. போகும் வழியில் இவ்வளவு அகலமான பாதைகள் இல்லாமல், இவ்வளவு எடையைத் தாங்கக்கூடிய பாலங்கள் இல்லாமல் மழையிலும் வெய்யிலிலும் கிடந்தார் கோதண்ட ராமர். ஒவ்வொரு ஊரிலும் 10-15 நாட்கள் இருந்ததால் அந்தந்த ஊர் மக்கள் அவருக்கு வழிபாடுகள் மேற்கொண்டனர்.

ஆங்காங்கே தற்காலிகமாக மண்சாலைகள் அமைத்து சிலையைக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்தது. முதலில் 150 டயர்கள் பொருத்தப்பட்ட வாகனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு முடியாத நிலையில் பிறகு 240 டயர்கள் பொருத்தப்பட்ட பிரமாண்ட வாகனத்தில் கொண்டு செல்லப்படுகிறது. 

அப்படி இப்படி என்று ஏழு மாதங்கள் தொடர் போராட்டத்துக்குப் பின் ஒரு வழியாக ஓசூருக்கு வந்த கோதண்ட ராமர் அங்கு இவ்வளவு எடையுடைய சிலையைப் பாலத்தில் ஏற்றமுடியாது என்பதனால் கடந்த 12 நாட்களாகக் காத்திருந்தார். அங்கே தற்காலிக மண்சாலை போடப்பட்டு இன்று கர்நாட எல்லையான  அத்திபல்லியைக் கடந்தார். அங்கிருந்து பெங்களூர் பக்கம் தான் என்றாலும் பெங்களூரு வாகன நெரிசலில் எவ்வாறு கடக்கப்போகிறார் என்பது அடுத்த சிக்கல்!

NEXT STORY