காரைக்கால் மாங்கனித் திருவிழா: ஏராளமான பக்தர்கள் மாங்கனி வீசி வழிபாடு

ஆன்மிகம்
Updated Jul 16, 2019 | 14:02 IST | Times Now

இன்று காரைக்கால் மாங்கனித் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் புனிதவதியும் பிரம்மதத்தரும்
காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் புனிதவதியும் பிரம்மதத்தரும்  |  Photo Credit: Twitter

63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழாகூடிய திருத்தேரோட்டம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இன்று நடைபெற்ற விழாவில் புனிதவதியிடம் ஈசன் பிட்சை வாங்கிய பிச்சாண்டவராக பவளக்கால் விமானத்தில் வீதி உலா வந்தார். 

வரலாறு: சிவபக்தையான புனிதவதியின் வீட்டுக்கு ஒரு நாள் சிவபெருமான் சிவனடியார் வேடத்தில் உணவருந்த வந்திருக்கிறார். அவருக்கு உணவு பரிமாறிய புனிதவதி, தனது கணவர் பிரம்மதத்தர் வாங்கி வந்த 2 மாங்கனிகளில் ஒன்றை சிவனடியாருக்கு வைத்துவிட்டார். பின் உணவருந்த வந்த கணவன், ஒரு மாங்கனியை உண்டு அது மிகவும் ருசியாக இருப்பதை நினைத்து மற்றொரு மாங்கனியையும் கேட்க, கணவனிடம் உண்மையைக் கூற பயந்து கண்மூடி சிவனை நினைத்து உருக, கையில் ஒரு மாங்கனி தோன்றியது. அதனை கணவருக்கு படைக்க, இந்த மாங்கனி மிகவும் சுவையோடு இருந்ததால் உண்மையை கணவர் கேட்க, புனிதவதி உண்மையைக் கூறியதும் அதிர்ந்த கணவன், அவரை விட்டு விலகினான். இதனால் மனமுடைந்த புனிதவதி மனித உடலை விட்டு நீங்கி பேயுடல் பூண்டு சிவபெருமானிடம் சரணடைந்ததாக வரலாறு. 

விழாவில் பக்தர்கள் மாடிவீடுகளில் இருந்து கீழே இருக்கும் பக்தர்களுக்கு வீசுவார்கள். இறைவன் புனிதவதிக்கு அளித்த மாங்கனி போல, இதனை கீழே இருக்கும் பக்தர்கள் நினைத்து, மனதில் வேண்டிக் கொண்டு பெற்றுச் செல்வது ஐதீகம். வீட்டில் குழந்தை பாக்கியம் இல்லதவர்கள் இந்த மாங்கனியை உண்டால் விரைவில் குழந்தைப் பிறக்கும் என்று இந்த மாங்கனிகளைப் பிடித்துச் செல்வர். இந்த விழாவையொட்டி காரைக்காலில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

NEXT STORY