40 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான்! தொடங்கியது அத்திவரதர் தரிசனம் - வீடியோ

ஆன்மிகம்
Updated Jul 01, 2019 | 07:58 IST | Times Now

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் இன்று கோலகலமாகத் தொடங்கியது.

Aththivarathar
அத்திவரதர்  |  Photo Credit: Facebook

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவில் குளத்தில் அத்திவரதர் பெருமாள் வீற்றிருக்கிறார். இவர் எப்போதும் மக்களுக்கு தரிசம் கொடுப்பதில்லை, தண்ணீரிலேயேதான் மூழ்கி இருப்பார். எப்படி மகாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறதோ அப்படி இவரும் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வெளியே எழும்பி மக்களுக்கு தரிசனம் தருவார். 

அப்படி இந்த ஆண்டு அத்திவரதர் தரிசனம் செய்யும் நிகழ்வு வருவதால் சென்ற மாதமே குளத்தில் உள்ள நீர் அனைத்தும் போர் மூலம் வெளியே எடுக்கப்பட்டு அத்திவரதரை வெளியே எடுக்கும் பணி நடைபெற்றது. சென்ற வாரம் அந்தப்பணி முடிந்து அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டார். இன்று அதிகாலை சரியாக  2.45 மணிக்கு  பூரண அலங்காரங்களுடன் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இன்று முதல் வரும் ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி வரை 48 நாட்களுக்கு பெருமாளை தரிசனம் செய்யலாம். அதற்குப்பின் 40 வருடங்கள் கழித்துதான் அத்திவரதரைப் பார்க்க இயலும்.

தங்களது வாழ்நாளில் ஒரு முறையோ அல்லது இருமுறையோதான் அத்திவரதரின் தரிசனம் கிடைக்கும் என்பதால் பல்லாயிரணக்கான மக்கள் இன்று முதலே தரிசனம் செய்யத் தொடங்கிவிட்டனர். தமிழ்நாடு மட்டுமின்றி வட இந்தியாவில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை புரிகின்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களும் அத்திவரதரை அதிகாலையில் தரிசனம் செய்தார். இந்த தரிசன நிகழ்வில் பெருமாள் முதல் 30 நாட்கள் அனந்தசயன நிலையிலும் அடுத்த 18 நாட்கள் நின்ற நிலையிலும் தரிசனம் தருவார்.

இது 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நிகழ்வு என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் அத்திவரதரை தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் பலத்தப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 1-ஆம் தேதியான இன்று முதல் ஆகஸ்டு 17-ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக காஞ்சிபுரம் சென்றடையும்.

 

 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...