வடஇந்தியாவில் இன்று ‘ஹனுமன் ஜெயந்தி’..இரண்டு முறை ஏன் கொண்டாடுகிறோம்?!

ஆன்மிகம்
Updated Apr 19, 2019 | 15:04 IST | Times Now

தமிழகம் மற்றும் கேரளாவில் மார்கழி மாத அமாவாசையும், மூலநட்சத்திரமும் சேர்ந்த நாளில் ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

spiritual, ஆன்மிகம்
ஹனுமான்   |  Photo Credit: Twitter

டெல்லி: வட இந்திய மாநிலங்களில் சித்ரா பெளர்ணமியான இன்று ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 

அஞ்சனை மைந்தனான ஆஞ்சநேயரின் பிறந்தநாளே ஹனுமன் ஜெயந்தியாகும். 

தமிழகம் மற்றும் கேரளாவில் மார்கழி மாத அமாவாசையும், மூலநட்சத்திரமும் சேர்ந்த நாளில் ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மூலநட்சத்திரமும், அமாவாசையும் கூடிய மார்கழி மாத நாளே அனுமனின் பிறந்த தினமாகும். 

ஆனால், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 41 நாட்கள் தொடங்கி நடைபெறும் விரதத்தில், சித்ரா பெளர்ணமி அன்று ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவிலும் மார்கழி மாத சுக்ல பட்சத்தில் அனுமன் விரதம் கடைபிடிக்கப்படுகிறது. 

அதேபோன்று வடமாநிலங்களிலும் சித்ரா பெளர்ணமி அன்றே ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஹனுமத் ஜெயந்தி அன்று ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதுவது நற்பலன்களை அள்ளித்தரும்.

அனுமனுக்கு வெண்ணை சாற்றினால் குழந்தை பாக்கியமும், துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

பொரி, பழம், கடலை, சர்க்கரை, ஆஞ்சநேயருக்கு விருப்பமான வெண்ணெய், பானகம் ஆகியவற்றை நெய்வேத்தியமாக படைக்கலாம். ஒருவேளை மட்டும் உணவு உண்டு, இரவில் ராமநாப ஜெபம், ஆஞ்சநேய அஷ்டோத்திர பாராயணம் ஆகியவை வாழ்வில் அனைத்து நன்மைகளும் அள்ளித்தரும். மனித வாழ்வின் எவ்வித பிரச்சனைகளுக்கும் கண் கண்ட மருந்தாக விளங்கும் சுந்தர காண்ட பாராயணமும் சகல செளபாக்கியங்களையும் ஹனுமன் ஜெயந்தி அன்று அள்ளித்தரும்!

NEXT STORY
வடஇந்தியாவில் இன்று ‘ஹனுமன் ஜெயந்தி’..இரண்டு முறை ஏன் கொண்டாடுகிறோம்?! Description: தமிழகம் மற்றும் கேரளாவில் மார்கழி மாத அமாவாசையும், மூலநட்சத்திரமும் சேர்ந்த நாளில் ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola