வளம் கொழிக்கும் விநாயகர் சதுர்த்தி!

ஆன்மிகம்
Updated Sep 01, 2019 | 19:52 IST | Times Now

ஆவணி மாதம் சதுர்த்தியன்று கஜமுகாசுரனை அழித்து தேவர்களை மீட்ட நாளையே விநாயகர் சதுர்த்தி என்று நாம் கொண்டாடுகிறோம்.

விநாயகர் சதுர்த்தி
vinayagar chathurthi  |  Photo Credit: Getty Images

செப்டம்பர் 2ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப் படுகிறது. இதற்காக வீடு தோறும், தெருக்கள் தோறும் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அரக்கர்களின் கொடுமையால் தேவர்கள் தங்களைக் காக்க ஒருவர் வேண்டும் என்று சிவபெருமானிடம் முறையிட, சிவனும் பார்வதியும் உருவாக்கியவரே விநாயகர். இவர் ஆவணி மாதம் சதுர்த்தியன்று கஜமுகாசுரனை அழித்து தேவர்களை மீட்ட நாளையே விநாயகர் சதுர்த்தி என்று நாம் கொண்டாடுகிறோம். பல காலமாக இந்த விழா நடைபெற்றாலும் சிலை வைத்து பூஜை செய்து கடலில் கரைப்பது 1893ஆம் ஆண்டு முதல் தானாம். சர்வஜன கணேஷ் உத்சவ் என்ற பெயரில் அந்த வருடம் முதல், நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் அரங்கேறத்தொடங்கி இருக்கின்றன. 

இந்த வருடம் செப்டம்பர் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம், விநாயகருக்குப் பிடித்த உணவான கொழுக்கட்டை, மோதகம் வைத்து படைக்கப்படுகிறது. 3ஆம் நாளில் வீட்டில் பூஜை செய்யப்பட்ட சிலை ஆற்றிலோ கடலிலோ கரைக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களான மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா போன்றவற்றில் சுமார் 10 நாட்கள் விழாவாகக் கொண்டாடப் படுகிறது. இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இவ்விழாவைக் கொண்டாடுகிறார்கள். 

’கொழுகொழு’ கொழுக்கட்டை எவ்ளோ ஸ்பெஷல் தெரியுமா?

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை தாறுமாறாக ஏறியுள்ளது. 500 ரூபாய் மல்லி 1000 ரூபாய்க்கும், 500க்கு விற்கப்பட்ட முல்லை 800க்கும், 400க்கு விற்பனை ஆன கனகாம்பரம் 800க்கும் விலை உயர்ந்துள்ளது. இதேபோல விநாயகர் சிலைகள், தேங்காய், எருக்கம் பூ மாலைகள் ஆகியவற்றில் விலையும் அதிகமாகவே விற்பனை செய்யப்படுகிறது. 
 

NEXT STORY