விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து

ஆன்மிகம்
Updated Sep 02, 2019 | 11:50 IST | Times Now

விநாயகப் பெருமானின் அவதார நாளில் வீடெங்கும் அன்பும் மகிழ்ச்சியும் நிறையட்டும் என்றும் நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும் என்றும் முதல்வர் பழனிசாமி வாழ்த்தியுள்ளார்.

Ramnath Kovind, Edappadi K. Palaniswami, ராம்நாத் கோவிந்த், எடப்பாடி பழனிசாமி
ராம்நாத் கோவிந்த், எடப்பாடி பழனிசாமி  |  Photo Credit: Twitter

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் உயரமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு துதிப்பாடல்களுடன் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. காலை முதலே கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதால் மக்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகப் பெருமானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ”ஐந்து கரத்தான் என்று அழைக்கப்படும் விநாயகர் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார். மேலும், விநாயகப் பெருமானின் அவதார நாளில் வீடெங்கும் அன்பும் மகிழ்ச்சியும் நிறையட்டும் என்றும் நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும் என்றும் முதல்வர் பழனிசாமி வாழ்த்தியுள்ளார்.

துணை முதல்வரும் அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம்:  முழுமுதற்கடவுளாம் விநாயகப்பெருமான் அவதரித்த திருநாளை உவகையோடு கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது உளம்கனிந்த #விநாயகர்சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகள்! வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளும் விநாயகர், அனைவருக்கும் நலமும் வளமும் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்வை வழங்கிட வேண்டிக்கொள்கிறேன்.

 

 

 

 

தமிழிசை சவுந்தரராஜன்: தமிழர் வாழ்வில் அனைத்து இன்பங்களும் பெறுக தமிழர்கள் அனைவரும் இன்முகத்தோடு வாழ விநாயகர் அருள்புரிவார்.அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

 

 

 

 

விநாயகரின் அருளால் அனைவரது வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும், வளமும் பெற வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்தியுள்ளார்.

 

 

 

 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள வாழ்த்தறிக்கையில், ”இந்த நன்னாளில் விநாயகரின் அருளால் துன்பங்கள் அகன்று, வளமும் நலமும் பெருகட்டும். அன்பும் அமைதியும் உலகில் தழைத்து ஓங்கட்டும்,” என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

இதே போல, பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகியோரும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் நாட்டு மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

NEXT STORY