அத்திவரதர் திருவிழா... காஞ்சிபுரத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

ஆன்மிகம்
Updated Jul 07, 2019 | 13:40 IST | Times Now

பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Athi Varadar darshan
Athi Varadar darshan   |  Photo Credit: Twitter

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்  அத்திவரதர் திருவிழா கடந்த 1 ஆம் தேதி கோலகலமாக தொடங்கியது. கோவிலின் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதர் ஆகஸ்ட் 17- ஆம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

30 நாட்கள் சயன கோலத்திலும், அதைத் தொடர்ந்து 18 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிக்க உள்ளார். அத்திவரதரை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்கிறார்கள். இன்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் பெருமளவில் திரண்டனர். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அத்திவரதை தரிசனம் செய்து வருகின்றனர்.

Athi Varadar

ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்துள்ளனர். வெளியூர்களில் இருந்தும் ஏராளமானவர்கள் கார், வேன்களில் வந்து குவிந்தனர். 3 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். பொது தரிசன வரிசையில் சென்றவர்கள் குறைந்தபட்சம் 4 மணி நேரம் காத்திருந்தே பின்பே அத்திவரதரை தரிசிக்க முடிந்தது.

பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் காஞ்சிபுரம் நகரமே முடங்கியுள்ளது. பக்தர்களின் வருகையொட்டி சுழற்சி முறையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

NEXT STORY
அத்திவரதர் திருவிழா... காஞ்சிபுரத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Description: பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola