இஸ்லாமியர்களின் புனித நோன்பு ரமலான் - மே 7ம் தேதி துவங்குகிறது!

ஆன்மிகம்
Updated May 05, 2019 | 22:16 IST | Times Now

இஸ்லாமிய மக்கள் பின்பற்றும் குரான் கூறும் 5 முக்கிய கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு நோற்றல். அதன்படி ரமலான் நோன்பினை துவங்குவதற்கான பிறை தென்பட்டுள்ளது.

tamil nadu, தமிழ்நாடு
ரம்ஜான் நோன்பு  |  Photo Credit: Getty Images

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற மே 7ம் தேதி முதல் ரமலான் நோன்பு துவங்க உள்ளதாக அரசு தலைமை காஜி தெரிவித்துள்ளார். 

இஸ்லாமியர்கள் ரமலான் மாதம், 30 நாட்கள் நோன்பிருந்து பண்டிகை கொண்டாடுவார்கள். ரம்ஜான் அல்லது ரமலான் எனப்படும் இந்த நோன்பைத் துவங்க வானில் பிறை தென்பட்டதால் வரும் மே 7ம் தேதி முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று அரசு தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் அறிவிப்பு செய்துள்ளார். 

இஸ்லாமிய மக்கள் பின்பற்றும் குரான் கூறும் 5 முக்கிய கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு நோற்றல். அதன்படி ரமலான் நோன்பினை துவங்குவதற்கான பிறை தென்பட்டுள்ளது. எனினும், சென்னை மற்றும் சில மாவட்டங்களில் இந்த பிறை காணப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

எனினும், மே7ம் தேதி ரமலான் நோன்பு ஆரம்பிக்கப்பட உள்ளது. நோன்பு துவங்கிய நாளில் இருந்து 30 நாட்களும் இஸ்லாமியர்கள் 5 வேளை தொழுகை நடத்தி, விரதமிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
இஸ்லாமியர்களின் புனித நோன்பு ரமலான் - மே 7ம் தேதி துவங்குகிறது! Description: இஸ்லாமிய மக்கள் பின்பற்றும் குரான் கூறும் 5 முக்கிய கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு நோற்றல். அதன்படி ரமலான் நோன்பினை துவங்குவதற்கான பிறை தென்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola