காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசித்த துர்கா ஸ்டாலின்

ஆன்மிகம்
Updated Jul 09, 2019 | 09:46 IST | Times Now

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

Durga stalin
Durga stalin  |  Photo Credit: Twitter

காஞ்சிபுரம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதை தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் திருவிழா கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திரவரதை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வந்த வண்ணம் உள்ளனர். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அத்திவரதரை காண வருகின்றனர்.

வரதராஜ பெருமாள் கோவிலின் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதர் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். எட்டாவது நாளான நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வரிசையில் வந்து அத்திவரதரை தரிசித்தி செல்கின்றனர். திங்கள்கிழமை காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 90 ஆயிரம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா நேற்று அத்திவரதரை தரிசனம் செய்தார். கோவிலின் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் அத்திவரதருக்கு பச்சை நிறப்பட்டு மற்றும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய மாலையை அணிவித்து அவர் தரிசனம் செய்தார். அப்போது அத்திவரதருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. 

ஆகஸ்ட் 17- ஆம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் 30 நாட்கள் சயன கோலத்திலும், அதைத் தொடர்ந்து 18 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிக்க உள்ளார். 

NEXT STORY
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசித்த துர்கா ஸ்டாலின் Description: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola