ஐந்து கோடி ரூபாய் பணத்தால் அலங்கரிக்கப்பட்ட கோவை முத்துமாரியம்மன்!

ஆன்மிகம்
Updated Apr 14, 2019 | 16:32 IST | ANI

கோவை முத்துமாரியம்மன் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் சுவாமி அறை அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

kovai muthumariyamman
கோவை முத்துமாரியம்மன்  |  Photo Credit: ANI

இன்று சித்திரை முதல் நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவருகிறார்கள். தமிழர்களின் ஆண்டுக் கணக்கின்படி வசந்தகாலம் சித்திரை மாதத்திலேயே பிறக்கிறது. அதனால் சித்திரை முதல்நாள், தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

‘60 ஆண்டுகள் சுழற்சி முறை’ எனப்படும் சம்வத்சர சுழற்சியில் இன்று பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டிற்கு ‘விகாரி’ வருடம் என்று பெயர். விகாரி என்றால் தமிழில் ‘எழில்மாறல்’ அதாவது உருவமாற்றம் கொண்டவர்களைக் குறிக்கும் சொல்லாகும். இன்று மதியம் 1 மணி 6 நிமிடத்துக்கு உத்தராயணப் புண்ணிய காலத்தில் பிறந்தது விகாரி வருடம். ஞாயிற்றுக் கிழமையில் பிறக்கும் விகாரி வருடத்திற்கு ராஜா சனி, மந்திரி நவக்கிரகங்களில் சூரியன். 

இந்த புத்தாண்டை முன்னிட்டு தமிழ் மக்கள் அனைவரும் கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். அப்படி வழிபாடு நடத்துவதன் மூலம் இந்த வருடம் முழுக்க ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்புடனும் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் கோயில்களிலும் கடவுள்களுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடத்துவர். வருடா வருடம் எப்போதுமே கோவை முத்துமாரியம்மன் கோவிலில் அலங்கரிக்கப்படும் விதம் மிகவும் பிரபலம். சென்ற வருடம் 4 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் சுவாமி அறை அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாரியம்மன் அதோடுகூட சிலைக்கு  ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வைரம் பதித்த தங்க நகைகளும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அதே போல இந்த வருடமும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் சுவாமி அறை அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.  சென்ற ஆண்டு அலங்கரித்தது போலவே வைரங்கள் பதித்த நகைகள் அம்மனுக்கு அலங்காரம் செய்யப் பட்டன. இவ்வாறு பணத்தாலும் நகைகளாலும் அலங்காரம் செய்வதன் மூலம் நாட்டு மக்களுக்கு செல்வச் செழிப்புக் கூடும்  என்பதால் இவ்வாறு அலங்காரம் செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது.

NEXT STORY
ஐந்து கோடி ரூபாய் பணத்தால் அலங்கரிக்கப்பட்ட கோவை முத்துமாரியம்மன்! Description: கோவை முத்துமாரியம்மன் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் சுவாமி அறை அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola