இன்று குளத்தில் இறக்கப்படும் அத்திவரதர்: மொத்தம் உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?!

ஆன்மிகம்
Updated Aug 17, 2019 | 12:23 IST | Times Now

இது வரை அத்திவரதரை ஒரு கோடியே 7500 மக்கள் தரிசனம் செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Athivaradar
அத்திவரதர்  |  Photo Credit: Twitter

48 நாட்கள் அருள்பாலித்த அத்திவரதர் இன்று மாலை அனந்த சரஸ் குளத்தில் இறக்கப்படுகிறார். 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தின் உள்ளே வீற்றிருப்பவர் அத்திவரதர். அத்தி மரத்தில் ஆனதால் இவருக்கு அத்திவரதப் பெருமாள் என்று பெயர். சுமார் 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே இவர் குளத்தில் இருந்து வெளியே வந்து அருள் பாலிப்பதால் மிகவும் விசேஷமாகவே வணங்கப்படுபவர். 

இந்த வருடம் ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அப்படி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் அத்திவரதர். சுமார் 48 நாட்கள் மட்டுமே அவர் தரிசனம் தருகிறார். ஜூலை 1 ஆம் தேதி தொடங்கிய இந்த வைபவம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்று அதிகாலையில் தரிசனம் நிறைவு பெற்ற பின்னர், கோயிலில் இருந்து பக்தர்கள் வெளியேற்றப் பட்டனர். இன்று மாலை அனந்த சரஸ் குளத்தில் அத்திவரதர் இறக்கப்படுகிறார். 

இந்த 48 நாட்களில் சுமார் 1 கோடியே 7500 பக்தர்கள் அத்திவரதரை தரிசித்ததாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை வரை சுமார் 2 கோடி உண்டியல் வசூல் ஆனதாக தெரிவிக்கபப்ட்டு இருந்தது. தற்போது ஆகஸ்ட் 16 வரை சுமார் 7 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை மட்டும் வந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. முன்னதாக அசம்பாவிதம் நடைபெறாமல் நல்லபடியாக இத்தனை நாட்கள் செம்மையாக உழைத்த அனைத்துத் துறையினருக்கும் நன்றி என்று முதல்வர் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...