40 ஆண்டுகளுக்குப் பிறகு குளத்தில் இருந்து வெளிவந்த அத்திவரதர் சிலை!

ஆன்மிகம்
Updated Jun 28, 2019 | 16:36 IST | Times Now

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திவரதர் திருவிழா ஜூலை 1 ஆம் தேதி தொடங்க உள்ளது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த அத்திவரதர் சிலை
40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த அத்திவரதர் சிலை  |  Photo Credit: Twitter

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திவரதர் திருவிழா ஜூலை 1 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் மிகச்சிறப்பாக போற்றப்படுபவர் அத்திவரதர். கோயிவிலின் திருக்குளத்தில் வீற்றிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இக்கோவிலின் குளம் எப்போதும் வற்றுவதே இல்லை என்பதால், இத்திருவிழாவின்போது குளத்தில் உள்ள நீர் இறைக்கப்பட்ட அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்படுவது வழக்கம்.

40 ஆண்டுகளுக்குப்பிறகு அத்திவரதர் திருவிழா வரும் ஜூலை 1 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனையொட்டி, கோவில் குளத்தில் உள்ள நீர் இறைக்கப்பட்டது, அத்திவரதர் சிலை இன்று வெளியே எடுக்கப்பட்டது. ஜூலை 1 ஆம் தேதி முதல் 48 நாட்கள் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இத்திருவிழாவையொட்டி, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்து அத்திவரதரை தரிசனம் செய்வார்கள்.

இதனையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

NEXT STORY
40 ஆண்டுகளுக்குப் பிறகு குளத்தில் இருந்து வெளிவந்த அத்திவரதர் சிலை! Description: காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திவரதர் திருவிழா ஜூலை 1 ஆம் தேதி தொடங்க உள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola