இன்னும் 3 நாட்கள்தான் அதன்பிறகு அத்திவரதைப் பார்க்க 40 வருடங்கள் ஆகும்! - அலைமோதும் கூட்டம்

ஆன்மிகம்
Updated Aug 13, 2019 | 13:42 IST | Times Now

அத்திவரதரின் தரிசன காலம் முடிய இன்னும் 3 நாட்களே இருப்பதால் தினமும் வருபவர்களின் எண்ணிக்கையே லட்சக்கணக்கில் உள்ளது.

அத்திவரதர் தரிசனம்
அத்திவரதர் தரிசனம்  |  Photo Credit: Twitter

வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதியுடன் அத்திவரதரின் தரிசனம் நிறைவடைவதாலும் மீண்டும் அத்திவரதரை தரிசிக்க 40 ஆண்டுகள் ஆகும் என்பதாலும் காஞ்சிபுரம் வரும் பக்தர்களில் எண்ணிகை பல மடங்கு கூடியுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் குளமான அனந்த சரஸ் குளத்துக்குள் இருப்பவர் அத்திவரத பெருமாள். இவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். கடந்த முறை 1979 ஆம் ஆண்டு வெளியே வந்தவர் தற்போது ஜூலை 1 ஆம் தேதி வெளியே வந்த அத்திவரதர் ஜூலை 31 வரை அனந்த சயனக் கோலத்திலும் ஆகஸ்ட் 1 முதல்  நின்ற கோலத்திலும் காட்சியளிக்கிறார். 48 நாட்களுக்கு மட்டுமே காட்சியளிக்கும் அத்திவரதர் வரும் 16ஆம் தேதியுடன் தரிசனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் 40 ஆண்டுகளுக்கு குளத்தின் உள்ளே இருப்பார்.

வாழ்க்கையில் இரு முறையோ இரு முறையோதான் இந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் இருந்து அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். சிலர் வெளிநாடுகளில் இருந்து எல்லாம் வந்து தரிசனம் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 5-7 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்யவேண்டி உள்ளது. இருப்பினும் அதைஎல்லாம் பொருட்படுத்தாமல் தரிசம் செய்து வருகிறார்கள். விடுமுறை நாட்களில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேலாக பக்தர்களின் வருகை இருக்கிறது.

இந்நிலையில் அத்திவரதரின் தரிசன காலம் முடிய இன்னும் 3 நாட்களே இருப்பதால் தினமும் வருபவர்களின் எண்ணிக்கையே லட்சக்கணக்கில் உள்ளது. மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை தினமும் வருவதால் கூட்டம் அலை மோதுகிறது. இந்நிலையில் மேலும் 48 நாட்களுக்கு அத்திவரதை வெளியில் வைக்க இன்று பொது நல வழக்கு ஒன்று உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நீதிபதி இந்தனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளது. 

மேலும் கடைசி 4 தினங்களுக்கு அதாவது காஞ்சிபுரம் நகரத்தில் 13, 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளாதாகக் கூறினார். 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் கிடையாது என்றும், 16 ஆம் தேதியோடு அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுகிறது. பக்தர்கள் கூட்டத்தைப் பொறுத்து தரிசன நேரம் நீட்டிக்கப்படும் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஏற்கனவே கூறியுள்ளார்.   

NEXT STORY
இன்னும் 3 நாட்கள்தான் அதன்பிறகு அத்திவரதைப் பார்க்க 40 வருடங்கள் ஆகும்! - அலைமோதும் கூட்டம் Description: அத்திவரதரின் தரிசன காலம் முடிய இன்னும் 3 நாட்களே இருப்பதால் தினமும் வருபவர்களின் எண்ணிக்கையே லட்சக்கணக்கில் உள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...