ஊதா நிறப் பட்டாடையில் ஜொலிக்கும் அத்திவரதர்: 41வது நாளாக குவியும் பக்தர்கள்

ஆன்மிகம்
Updated Aug 10, 2019 | 17:34 IST | Times Now

அத்திவரதர் தரிசனம் நிறைவடைய உள்ளதையொட்டி ஆகஸ்டு 13, 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் காஞ்சிபுரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

Athi Varadar draped in violet
ஊதாநிறப் பட்டாடையில் அத்திவரதர்  |  Photo Credit: Twitter

காஞ்சிபுரம்: கடந்த ஜுலை 1 ஆம் தேதி தொடங்கிய அத்திவரதர் வைபவத்தின் 41-ம் நாளான இன்று, ஊதா நிறப் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார் அத்திவரதர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் ஜூலை 31-ம் தேதி வரை சயன கோலத்திலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறது. அத்திவரதரை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநில பக்தர்களும் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது. 

இந்நிலையில் வருகிற 16-ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைகிறது. இதனால் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் 6 தினங்களே உள்ள நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்களின் வசதிக்காக இரண்டு தற்காலிக தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. 

16 ஆம் தேதி இரவு பக்தர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து தரிசன நேரம் நீட்டிக்கப்படும் என ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்திருந்தார். மேலும், ஆகஸ்டு 13, 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் காஞ்சிபுரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இதுவரை 74 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 3.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 31-வது நாளான இன்றும் பக்தர்கள் வரிசையில் நின்று அத்திவரதரை தரிசித்து செல்கின்றனர்.

NEXT STORY
ஊதா நிறப் பட்டாடையில் ஜொலிக்கும் அத்திவரதர்: 41வது நாளாக குவியும் பக்தர்கள் Description: அத்திவரதர் தரிசனம் நிறைவடைய உள்ளதையொட்டி ஆகஸ்டு 13, 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் காஞ்சிபுரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...