வாழ்வில் வளம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை !

ஆன்மிகம்
Updated May 07, 2019 | 07:23 IST | Times Now

எதை வாங்கினாலும் அது குறைவில்லாமல் நிறைவாக வளர்ச்சியடையும் என்பதால் அரிசி, உப்பு, எலெக்ட்ரானிக் சாதனங்கள், புத்தகங்கள் என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப எதை வேண்டுமானாலும் வாங்கலாம். 

tamil nadu, தமிழ்நாடு
மாதிரிப்படம்  |  Photo Credit: PTI

சென்னை: தமிழகத்தில் இன்று அட்சயத் திருதியை கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம், அமாவாசைக்கு அடுத்த மூன்றாவது நாளில் வரும் திருதியை அட்சய திரிதியை என அழைக்கப்படுகிறது. 

அட்சய திரிதியை என்னும் சொல்லுக்கு ‘குறைவில்லாமல் நிறைவாக வளரக்கூடிய திரிதியை’ என்று பொருள். அத்தகைய வளர்ச்சி தரும் அட்சயதிரிதியை நாளை வருகிறது. அட்சய திரிதியை நாளில்தான் கங்கா நதி பூமிக்கு வந்தாள். இதே நாளில்தான் அவல் கொடுத்த குசேலருக்கு கிருஷ்ணர் நலன்களை அள்ளி வழங்கினார் என்பதும் புராணக்கதை.

இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது ஐதீகம் மற்றும் நம்பிக்கை. எனினும், இந்நாளில் தங்கம்தான் வாங்க வேண்டும் என்பது கிடையாது.

எதை வாங்கினாலும் அது குறைவில்லாமல் நிறைவாக வளர்ச்சியடையும் என்பதால் அரிசி, உப்பு, எலெக்ட்ரானிக் சாதனங்கள், புத்தகங்கள் என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப எதை வேண்டுமானாலும் வாங்கலாம். அட்சய திருதியை அன்று தானம் செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும்.

எனினும், இந்த முறை குரு வக்கிர கதியில் இருப்பதால் குருவின் அம்சமான தங்க நகைகளை இந்த அட்சய திரிதியில் வாங்குவதை தவிர்க்கலாம் என்று ஜோதிட வல்லுனர்கள் சிலர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
வாழ்வில் வளம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை ! Description: எதை வாங்கினாலும் அது குறைவில்லாமல் நிறைவாக வளர்ச்சியடையும் என்பதால் அரிசி, உப்பு, எலெக்ட்ரானிக் சாதனங்கள், புத்தகங்கள் என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப எதை வேண்டுமானாலும் வாங்கலாம். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola