’சாணியில் முக்கி...விளக்கமாற்றால் அடித்து’-மாமன் மச்சான் உறவு நீடிக்க விநோத திருவிழா!

ஆன்மிகம்
Updated May 02, 2019 | 20:06 IST | Times Now

தேனி, மறவப்பட்டியில் பழமையான பாரம்பரியம் கொண்ட முத்தாலம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு சித்திரை தமிழ் மாதமும் பொங்கல் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

tamil nadu, தமிழ்நாடு
முத்தாலம்மன் கோயில் திருவிழா  |  Photo Credit: Facebook

தேனி: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் உறவு மேம்பட வேண்டும் என்பதற்காக ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத கோயில் திருவிழா ஒன்று நடைபெற்றது.

தேனி, மறவப்பட்டியில் பழமையான பாரம்பரியம் கொண்ட முத்தாலம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு சித்திரை தமிழ் மாதமும் பொங்கல் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வே மாமன் மற்றும் மச்சான்கள் உறவில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்வதுதான். 

இந்த வழமையானது இங்கு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. குடும்பங்களுக்கு இடையே, பங்காளிகளுக்கு இடையே சிறிதாக தோன்றிய பிரச்சினைகள் தீர்க்கமுடியாமல் வளர்ந்துவிட்டால், இத்திருவிழாவிற்கு வரும் மாமன், மைத்துனர்கள் ஒருவரை ஒருவர் பிரச்சினையை மறந்து துடைப்பத்தால் அடித்துக் கொண்டால் அனைத்து சண்டை, சச்சரவுகளும் தீர்ந்துவிடும் என்று ஐதீகத்தை இங்கிருக்கும் கிராம மக்கள் நம்பிக்கையுடன் பின்பன்றி வருகின்றனர். 

அப்படி இந்த வருடம் நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாமன் மைத்துனர்கள் ஒரே இடத்தில் கூடி கலர்ப்பொடி, சாணி, சேறு, சாக்கடை நீரில் நனைக்கப்பட்ட துடைப்பங்களை கொண்டு மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு உற்சாகமாக நடனமாடினர். 

இந்த வித்தியாசமான விநோத நிகழ்வை உறவினர்களும், பொதுமக்களும் குதூகலமாக கண்டு ரசித்தனர். மேலும், பார்வையாளர்களின் மீது யாரும் மறந்து கூட துடைப்பத்தால் அடித்துவிடாமல் மரியாதையாக நடந்து கொள்வதும் இந்த திருவிழாவின் மதிப்பை உயர்த்திக் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
’சாணியில் முக்கி...விளக்கமாற்றால் அடித்து’-மாமன் மச்சான் உறவு நீடிக்க விநோத திருவிழா! Description: தேனி, மறவப்பட்டியில் பழமையான பாரம்பரியம் கொண்ட முத்தாலம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு சித்திரை தமிழ் மாதமும் பொங்கல் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola