ஓட்டுப் போடதவங்களுக்கு வேலை இல்லை! கோபப்பட்ட கர்நாடக முதல்வர் குமாரசாமி!

செய்திகள்
Updated Jun 26, 2019 | 17:42 IST | Times Now

கர்நாடாகவில் முதலமைச்சர் குமாரசாமியிடம் கூடுதல் சம்பளம் கேட்ட தொழிலாளர்களிடம், அவர் ஓட்டு இல்லை, வேலை இல்லை எனத் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுப் போடதவங்களுக்கு வேலை இல்லை! கோபப்பட்ட குமாரசாமி
ஓட்டுப் போடதவங்களுக்கு வேலை இல்லை! கோபப்பட்ட குமாரசாமி  |  Photo Credit: Times Now

பெங்களூரு: கர்நாடாகவில் முதலமைச்சர் குமாரசாமியிடம் கூடுதல் சம்பளம் கேட்ட தொழிலாளர்களிடம், அவர் ஓட்டு இல்லை, வேலை இல்லை எனத் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கிராமத்தில் தங்கும் நிகழ்ச்சிகாக காரேகுடா என்ற கிராமத்தை நோக்கி ஐக்கிய ஜனாத தளம் கட்சித் தலைவரும், கர்நாடக முதலமைச்சருமான குமாரசாமி பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ராய்சூர் என்ற இடத்தில் பேருந்தை வழிமறித்த சில தொழிலாளர்கள் கூடுதல் சம்பளம் வேண்டும் என குரல் எழுப்பியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த குமாரசாமி, அவர்களை திட்டித் தீர்த்துவிட்டார்.

எர்மரஸ் அனல் மின் நிலையத் தொழிலாளர்கள் குமாரசாமியின் பேருந்து வழிமறித்து கூடுதல் ஊதியம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஆத்திரமடைந்த குமாரசாமி, பேருந்தின் ஜன்னல் கதவை திறந்து, அவர் ஓட்டு இல்லை, வேலை இல்லை எனத் தெரிவித்துள்ளார். ‘நீங்கள் நரேந்திர மோடிக்கு ஓட்டுப் போட்டிருக்கேங்க, அவரிடம் போய் கேளுங்க. வேலை பற்றி என்னிடம் என் கேட்கிறீங்க’ என குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கிராமத்தில் தங்கும் நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் குமாரசாமி கோடிக் கணக்கான ரூபாய் அரசுப் பணத்தை பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காக நாள் ஒன்றுக்கு சுமார் 1.22 கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு மறுப்புத் தெரிவித்த முதலமைச்சர் குமாரசாமி, பாரதிய ஜனதா கட்சியிடம் இருந்து தனக்கு சான்றிதழ் எதுவும் தேவை இல்லை எனக் கூறிப்பிட்டிருந்தார்.

அண்மையில் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 25 இடங்களில் வெற்றிபெற்றது. ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது.

கர்நாடாக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 224 இடங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு 104 உறுப்பினர்கள் உள்ளனர். மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 37 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 80 உறுப்பினர்களும் உள்ளனர். மக்களவைத் தேர்தலுக்குப்பிறகு கூட்டணி ஆட்சியை தொடர்வதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் முதலமைச்சர் குமாரசாமி.

NEXT STORY
ஓட்டுப் போடதவங்களுக்கு வேலை இல்லை! கோபப்பட்ட கர்நாடக முதல்வர் குமாரசாமி! Description: கர்நாடாகவில் முதலமைச்சர் குமாரசாமியிடம் கூடுதல் சம்பளம் கேட்ட தொழிலாளர்களிடம், அவர் ஓட்டு இல்லை, வேலை இல்லை எனத் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola