ஆஸ்திரேலிய வீராங்கனையை திருமணம் செய்துகொண்ட நியூஸிலாந்து வீராங்கனை!

செய்திகள்
Updated Apr 19, 2019 | 16:41 IST | Twitter

கிரிக்கெட் துறையில் இது நான்காவது ஒரே பாலினத் திருமணம் ஆகும்.

Hayley Jensen, Nicola Hancock getting married
Hayley Jensen, Nicola Hancock getting married  |  Photo Credit: Twitter

காதலுக்கு மொழி, மதம், நாடு போல பாலினமும் முக்கியமல்ல என்று மற்றுமொரு முறை நிரூப்பித்திருக்கிறது இந்த நியூஸிலாந்து ஜோடி!

நியூஸிலாந்து கிரிக்கெட் வீராங்கனை ஹேலே ஜென்சனும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை நிக்கோலா ஹான்காக்கும் சென்ற வாரம் திருமணம் செய்துகொண்டுள்ளனர். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நியூஸிலாந்தில் ஒரே பாலினத்தவரகள் திருமணம் செய்துகொள்வது சட்டமானது. 

நிக்கோலா ஹான்காக், ஆஸ்திரேலியா கிரிக்கெட்டர், மெல்பர்ன் கிரிக்கெட் க்ளப்புக்காக விளையாடுபவர். ஹேலே மெல்பர்ன் ஸ்டார்ஸ் டீமுக்காகவும் விளையாடியவர். இவர்களது திருமண செய்தியை மெல்பர்ன் ஸ்டார்ஸ் டீம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துக் கூறியிருக்கிறது. 26 வயதான ஜென்சன் ஒரு ஆல் ரௌண்டர். 23 வயதான நிக்கோலா விக்கெட் எடுப்பதில் கில்லி.  சமீபத்தில் நடைபெற்ற Women's Big Bash League -இல் அதிகம் விக்கெட் எடுத்த இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். 

 

 

கிரிக்கெட் துறையில் இது நான்காவது ஒரே பாலினத் திருமணம் ஆகும். இதற்கு முன்னால் தென் ஆப்ரிக்கா பெண்கள் கிரிக்கெட் டீம் கேப்டன் டேன் வானும் அவரது டீமிலுள்ள மாரிஸேனும் சென்ற வருடம் திருமணம்ச் செய்து கொண்டனர். அதற்கு முன்னாள், நியூஸிலாந்து கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்து கொண்டனர். கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகள் மேகன் ஸ்கட்டும் ஜெஸ் ஹோலியோக்கும் ஒரே பாலினத் திருமணம் செய்தொகொண்டது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் ஜெயிக்க வாழ்த்துக்கள்!

NEXT STORY
ஆஸ்திரேலிய வீராங்கனையை திருமணம் செய்துகொண்ட நியூஸிலாந்து வீராங்கனை! Description: கிரிக்கெட் துறையில் இது நான்காவது ஒரே பாலினத் திருமணம் ஆகும்.
Loading...
Loading...
Loading...