LoksabhaElection2019: இரண்டு குழந்தைகளை சுமந்து கொண்டு வாக்களித்த இரண்டு பெண்கள்!

செய்திகள்
Updated Apr 18, 2019 | 16:47 IST | Times Now

பசவனகுடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினைப் பதிவு செய்த இந்த பெண்களை அங்கிருந்த வாக்காளர்கள் வியப்புடன் பார்த்தனர்.

election 2019, தேர்தல் 2019
தேர்தல் ஆணையம்  |  Photo Credit: PTI

பெங்களூரு: மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்ற நிலையில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும் தவறாமல் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

பெங்களூருவில் இரண்டு பெண்மணிகள் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்து வாக்களித்த சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபா சிம்ஹா மற்றும் விந்தியா சுகன் என்னும் அந்த பெண்கள் இருவரும் தங்களுடைய இரண்டு குழந்தைகளையும் முதுகு மற்றும் முன்புறத்தில் கட்டிக்கொண்டு வந்து தங்களுடைய வாக்கினைப் பதிவு செய்தனர்.

election 2019

பசவனகுடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினைப் பதிவு செய்த இந்த பெண்களை அங்கிருந்த வாக்காளர்கள் வியப்புடன் பார்த்தனர். மேலும், சமூக வலைத்தளத்திலும் இவர்கள் குழந்தைகளுடன் வந்து வாக்களிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

மக்களவைத் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நாடுமுழுவதும் இன்று நடைபெற்று வருகின்ற நிலையில், இத்தேர்தலில் கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்கள், முதல்தலைமுறை வாக்காளர்கள் என அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
LoksabhaElection2019: இரண்டு குழந்தைகளை சுமந்து கொண்டு வாக்களித்த இரண்டு பெண்கள்! Description: பசவனகுடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினைப் பதிவு செய்த இந்த பெண்களை அங்கிருந்த வாக்காளர்கள் வியப்புடன் பார்த்தனர்.
Loading...
Loading...
Loading...