முன்னாள் காதலரின் காதல் கடிதத்தை எரித்ததால் வீட்டில் தீ விபத்து!

செய்திகள்
Updated Sep 20, 2019 | 16:07 IST | Times Now

நெப்ராஸ்காவில் 19-வயது பெண் ஒருவர் முன்னாள் காதலர் எழுதிய காதல் கடிதங்களை எரித்த போது, எதிர்பாராத விதமாக அவர் குடியிருந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. 

காதல் கடிதத்தை எரித்ததால் தீ விபத்து,Woman burns her ex-lover's letters, accidentally sets house on fire
காதல் கடிதத்தை எரித்ததால் தீ விபத்து  |  Photo Credit: Getty Images

நெப்ராஸ்கா: அமெரிக்காவில் பெண் ஒருவர் தன் முன்னாள் காதலர் எழுதிய காதல் கடிதங்களை எரித்த போது, எதிர்பாராத விதமாக அவர் குடியிருந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. 

அரியானா சாண்டல் லிலார்ட் (19) என்ற இளம்பெண் நெப்ராஸ்காவில் உள்ள லிங்கனில் வசித்து வருகிறது. இவருக்கு சில நாட்களுக்கு முன்பு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் காதலர் எழுதிய கடிதங்களை தன் வீட்டில் எரித்துள்ளார். அதனை எரிப்பதற்கு அவர் பியூட்டேன் டார்ச்சை பயன்படுத்தியுள்ளார். ஆனால் அது சரியாக ஏரியாததால் , அதனை அந்த அறையில் இருந்து கம்பளத்தின் அருகில் போட்டுவிட்டு பக்கத்து அறைக்கு சென்று உறங்கியுள்ளார். 

பின்னர் அந்த கம்பளம் நெருப்பில் பற்றி எரிய தொங்கியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாதபோது அந்த பெண் நன்கு உறங்கிக்கொண்டிருக்க தீ அதிகமானது. பிறகு புகையால் அந்த பெண் தூக்கத்தில் இருந்து எழுந்துகொண்டார். உடனே பதறிபொய் வீட்டை விட்டு வெளியேறி, லிங்கன் நகர தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர் உடனே அங்கு வந்து தீயை அணைத்தனர். 

இந்த தீ விபத்தாதல் அவர் வீட்டில் இருந்த கட்டிடத்தில் கிட்டத்தட்ட 40,000 டாலர்கள் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அலட்சியதால் இவ்வாறு விபத்து ஏற்படுத்தியதற்காக அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. காதல் தோல்வியால் பல விபரீத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், இந்த பெண் காதல் கடிதங்களை எரிக்க, இப்படி தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.         

 
 

NEXT STORY