நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கான தேதி அறிவிப்பு

செய்திகள்
Updated Oct 16, 2019 | 22:22 IST | Times Now

கடந்த இரண்டு ஆண்டுகளில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 21 ஆம் தேதி கூட்டப்பட்டு ஜனவரி முதல் வாரத்தில் முடிவடைந்ததது குறிப்பிடத்தக்கது.

Parliament
நாடாளுமன்றம்  |  Photo Credit: ANI

டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடா் வரும் 18 ஆம் தேதி துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நவம்பா், டிசம்பா் மாதங்களில் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு குளிர்கால கூட்டத் தொடரை நடத்துவதற்கான தேதியை இறுதி செய்வதற்காக, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், குளிர்கால கூட்டத் தொடரை வரும் 18 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 24 ஆம் தேதி வரையில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கூட்டத் தொடரில் சில முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  குறிப்பாக இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில் முறையான சட்டம் இயற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.  தற்போது நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய சில அறிவிப்புகளை இந்தக் கூட்டத் தொடரில் அறிவிக்க வாய்ப்பு என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 21 ஆம் தேதி கூட்டப்பட்டு ஜனவரி முதல் வாரத்தில் முடிவடைந்ததது குறிப்பிடத்தக்கது.
 

NEXT STORY