விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது! - நாளை பெறுகிறார்

செய்திகள்
Updated Aug 14, 2019 | 12:25 IST | Times Now

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு சுதந்திர தினத்தன்று வீர் சக்ரா விருது வழங்கப்படவுள்ளது.

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது
Vir Chakra Award for Wing Commander Abhinandhan   |  Photo Credit: Twitter

டெல்லி: இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானுக்கு சுதந்திர தினத்தன்று வீர் சக்ரா விருது வழங்கப்படவுள்ளது.

புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதற்கு காரணமான ஜெய்ஷ்-இ-மொகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்களில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறிப்படுகிறது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் விமானப்படை இந்திய ராணுவ தளங்களில் தாக்குதல் நடத்த முயன்ற போது, அதனை இந்திய விமானப்படை தடுத்து நிறுத்தியது. அப்போது அந்த தாக்குதலில் விங் கமாண்டர் அபிநந்தனின் மிக்-21 ரக போர் விமானம் தாக்கப்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்து அவர் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார்.

இதனை தொடர்ந்து அவர் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்திய அரசாங்கத்தின் முயற்சியாலும் சர்வதேச அளவில் இருந்து வந்த அழுத்தத்தாலும் மார்ச் மாதம் 2-ஆம் தேதி, கிட்டத்தட்ட 60 மணி நேரத்திற்கு பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட போதும் அவரது இந்த தைரியத்திற்காகவும் துணிச்சலுகவும் விங் கமாண்டர் அபிநந்தன் அனைவராலும் பாராட்டப்பட்டார். இந்நிலையில் அவரது இந்த வீர செயலை கௌரவிக்கும் விதமாக அவருக்கு வீர் சக்ரா விருது நாளை 73-வது சுதந்திர தினத்தன்று டெல்லியில் வழங்கப்படவுள்ளது.

போர்க்களத்தில் வீர செயல் புரிந்தவர்களுக்கு இந்திய அரசாங்கம் இந்த வீர் சக்ரா விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த சுதந்திர தினத்தில் தமிழகத்தை சேர்ந்த அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது நாளை வழங்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் விமானப்படையின் ஸ்குவாடன் லீடர் மிண்டி அகர்வாலுக்கு நாளை யுவ சேவா பதக்கம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது! - நாளை பெறுகிறார் Description: இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு சுதந்திர தினத்தன்று வீர் சக்ரா விருது வழங்கப்படவுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...