தேர்தல் 2019: மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியா?

செய்திகள்
Updated Apr 16, 2019 | 12:43 IST | Times Now

மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியா?
மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியா?  |  Photo Credit: PTI

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. தற்போது, பிரதமர் மோடியை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளது ஏறக்குறைய உறுதியாகி இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ரபேரேலி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, வாரணாசி தொகுதியில் நான் போட்டியிடலாமா? என பதில் கேள்வி எழுப்பியிருந்தார். 

எனினும், பிரியங்கா தேர்தலில் போட்டியிடுவாரா என்ற யூகம் தற்போது உண்மையாக உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் உண்மையானால், வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவது, இந்த மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேரடி அரசியலில் ஈடுபடாமல் இருந்துவந்த பிரியங்கா காந்தி, மக்களவைத் தேர்தலுக்கு சற்று முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த தேர்தலில் சோனியா காந்தி தலைமையில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சி, இந்தமுறை ராகுல் காந்தியின் புதிய தலைமையின் கீழ் தேர்தலை சந்திக்கிறது. ராகுல்காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.  ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் தாயாரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி ரேபேரலி தொகுதியில் தேர்தலை சந்திக்கிறார். 

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாரணாசி மற்றும் குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய இரண்டு தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றிபெற்றார். வதோதரா தொகுதியில் 5 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றிபெற்றார். வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் களமிறங்கினார். வாரணாசி தொகுதியில் மோடி 3 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 

NEXT STORY
தேர்தல் 2019: மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியா? Description: மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...
Loading...
Loading...